
இஸ்ரேல் நாட்டின் தூதரை சந்தித்து பேசினார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தற்போது தனது 'தேஜஸ்' திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளை மிக மும்முரமாக செய்து வருகிறார்.
அதற்காக அவர் டெல்லி சென்றப்பொழுது அங்கு அவர் இஸ்ரேல் நாட்டின் தூதரான நவோர் கிலோனை சந்தித்து பேசியுள்ளார் என்று செய்திகள் வெளியாகின.
இது குறித்து கங்கனா ரனாவத் தனது எக்ஸ் பக்கத்தில், 'இஸ்ரேல் தூதருடன் மேற்கொண்ட சந்திப்பானது மனதுக்கு நிறைவாக இருந்தது. இஸ்ரேலியர்கள் மற்றும் யூதர்களுக்கான என்னுடைய ஆதரவு குறித்து எடுத்துரைத்தேன்' என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் அவர், ராவணனை எரிக்க அதாவது தசராவை முன்னிட்டு டெல்லி சென்ற நிலையில், இன்றைய ராவணர்களாகிய ஹமாஸை வீழ்த்த போராடுபவர்களை சந்திக்க விரும்பியதாகவும் நவோர் கிலோனிடம் இந்த சந்திப்பின் போது கங்கனா கூறியுள்ளார் என்று தெரிகிறது.
கங்கனா
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கும் உலக நாடுகள்
மேலும் அவர், குழந்தைகளும் பெண்களும் இலக்காகி கொல்லப்படுவது மனதை மிகவும் நெருடுகிறது என்றும், பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் இஸ்ரேல் நிச்சயம் இந்த போரில் வெற்றி பெறும் என்னும் நம்பிக்கை தனக்கு உள்ளது என்றும் பதிவு செய்துள்ளார்.
இதனிடையே அவர், பயங்கரவாதிகள் தங்கள் படுகொலைகளை செய்ய துவங்குவதற்கு முன்பே குரல் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ள கங்கனா,'என் இதயம் இஸ்ரேலுக்கு செல்கிறது. எங்கள் இதயத்திலும் ரத்தம் வழிகிறது' என்று போரில் கொல்லப்படும் பொதுமக்கள் குறித்து உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
இஸ்ரேல், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.