LOADING...
"நாங்கள் பிரிகிறோம்": நடிகை ஹேமமாலினியின் மகள் ஈஷா தியோல், கணவரை பிரிவதாக அறிவிப்பு
பிப்ரவரி 7 அன்று, தம்பதியினர் தங்கள் முடிவைப் பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டனர்

"நாங்கள் பிரிகிறோம்": நடிகை ஹேமமாலினியின் மகள் ஈஷா தியோல், கணவரை பிரிவதாக அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 07, 2024
10:41 am

செய்தி முன்னோட்டம்

திருமணமாகி 12 வருடங்கள் ஆன நிலையில், பிரபல பாலிவுட் நடிகை ஈஷா தியோல் மற்றும் பாரத் தக்தானி இருவரும் பிரிவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே இருவரும் பிரிந்து விட்டதாக வதந்தி பரவிய நிலையில், இது பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். பிப்ரவரி-7 அன்று, தம்பதியினர் தங்கள் முடிவைப் பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அவர்களின் அறிக்கையில்,"நாங்கள் பரஸ்பரம் மற்றும் இணக்கமாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்கள் வாழ்க்கையில் இந்த மாற்றத்தின் மூலம், எங்கள் இரு குழந்தைகளின் நலனும் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். எங்கள் தனியுரிமை முழுவதும் மதிக்கப்படுவதை நாங்கள் பாராட்டுகிறோம்" என தெரிவித்துள்ளனர். நடிகை ஈஷா,'ஆயுத எழுத்து' திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

ஈஷா தியோல் டைவர்ஸ்