NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிப்பதிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக 12த் ஃபெயில் பட நடிகர் அறிவிப்பு; இதன் காரணமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிப்பதிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக 12த் ஃபெயில் பட நடிகர் அறிவிப்பு; இதன் காரணமா?

    நடிப்பதிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக 12த் ஃபெயில் பட நடிகர் அறிவிப்பு; இதன் காரணமா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 02, 2024
    02:00 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரபல பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி நடிப்பிலிருந்து சில காலம் விலக போவதாக அறிவித்துள்ளார். இவர் '12த் ஃபெயில்' படத்தின் மூலம் பெரும் கவனத்தைப் பெற்றவர், சமீபத்தில் வெளியான 'தி சபர்மதி ரிப்போர்ட்' படத்தில் நடித்திருந்தார்.

    இந்த படம், 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

    இந்த படம் அரசியல் உள்நோக்கத்தோடு எடுக்கப்பட்டதாக விமர்சனங்களை பெற்றது. இவற்றோடு மேலும் பல படங்களில் ஒப்பந்தம் ஆகியிருந்த விக்ராந்த் மாஸ்ஸி தற்போது சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    அச்சுறுத்தல்

    அச்சுறுத்தல் காரணமாக விலகுகிறாரா விக்ராந்த்?

    தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவில், "கடந்த சில ஆண்டுகள் மற்றும் அதன் பின்னரான விஷயங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. உங்களின் ஆதரவிற்கு நன்றி. நான் முன்னே செல்ல வேண்டும் என யோசிக்கையில், ஒரு கணவராக, தந்தையாக, மகனாக மற்றும் நடிகராக வீட்டிற்கு போக இது சரியான நேரம் என்பதை புரிந்துகொண்டேன். 2025ல், கடைசியாக ஒருவரை ஒருவர் சந்திப்போம். என்னுடைய கடைசி இரண்டு படங்களும் உள்ளன. இந்தப் படங்களுக்கும், இந்த வருடங்களுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டார்.

    தி சபர்மதி ரிப்போர்ட்டில் தனது சமீபத்திய பாத்திரத்திற்காக தொழில்முறை பாராட்டுகளுக்கு மத்தியில், தனது ஆண் குழந்தையை குறிவைத்து தனக்கு அச்சுறுத்தல்கள் வந்ததாக முன்னர் விக்ராந்த் மாஸ்ஸி வெளிப்படுத்தி இருந்தார்.

     அச்சுறுத்தல் விவரங்கள்

    'என் கைக்குழந்தையை இதற்குள் இழுக்கிறார்கள்...'

    முன்னதாக டைனிக் பாஸ்கருக்கு அளித்த பேட்டியில், சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் தனக்கு அச்சுறுத்தல்கள் வருவதை விக்ராந்த் வெளிப்படுத்தினார்.

    மகனின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதாக அவர் கூறினார்.

    "ஒன்பது மாதங்களுக்கு முன்பு நான் தந்தையானேன் என்பது இவர்களுக்குத் தெரியும். அவர்கள் என் கைக்குழந்தையை இதற்கு இழுக்கிறார்கள். அவனுடைய பாதுகாப்பிற்காக நான் கவலைப்படுகிறேன்." "நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்? பயமாக இல்லாவிட்டாலும் மனவருத்தம் தருகிறது. நான் பயந்திருந்தால், இந்தப் படத்தை நாங்கள் தயாரித்து மக்களிடம் கொண்டு வந்திருக்க மாட்டோம்." எனக்கூறியிருந்தார்.

    திரைப்படம்

    விக்ராந்த் மாஸ்ஸியின் சமீபத்திய திரைப்படம் அதன் கதையினால் சர்ச்சைக்குள்ளானது

    2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை பற்றி விவரிக்கும் சபர்மதி ரிப்போர்ட் என்ற அவரின் சமீபத்திய திரைப்படம், அதன் முக்கியமான கதைக்கருவால் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

    பின்னடைவு இருந்தபோதிலும், இது விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது மற்றும் இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) 2024 இல் காட்சிப்படுத்தப்பட்டது.

    தீரஜ் சர்னா இயக்கத்தில், ராஷி கண்ணா மற்றும் ரித்தி டோக்ராவுடன் மாஸ்ஸி நடித்துள்ளனர்.

    நவம்பர் 15ஆம் தேதி வெளியான இந்தப் படம் குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர்
    பாலிவுட்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    நடிகர்

    #கார்த்தி27: கார்த்திக்கு சகோதரியாக நடிக்கிறார் ஸ்ரீதிவ்யா கார்த்தி
    நடிகர் விஜயகுமார் வீட்டு திருமணம்; ஒதுக்கப்பட்ட வனிதா விஜயகுமார் வனிதா விஜயகுமார்
    'கேப்டன் மார்வெல்' பட புகழ் ஹாலிவுட் நடிகர் கென்னத் மிட்செல் காலமானார் ஹாலிவுட்
    மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவகுமார்; வெளியான உண்மை தகவல் தமிழ் நடிகர்

    பாலிவுட்

    27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கஜோலுடன் இணையும் நடனப்புயல் பிரபுதேவா! தெலுங்கு திரையுலகம்
    ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட்டின் இரண்டாவது ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டம் எங்கே தெரியுமா? முகேஷ் அம்பானி
    நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டமிட்ட கும்பல்: துப்பாக்கிச்சூடு நடத்திய 4 பேர் கைது சல்மான் கான்
    ரஜினிகாந்தின் 'லிங்கா' பட நாயகி சோனாக்ஷிக்கு இந்த மாதம் திருமணம் திருமணம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025