பிக்பாஸ் தமிழ் சீசன் 8: இந்த வாரம் நாமினேஷன் ஃபிரீ பாஸை பெற்றது யார்?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 18 நாட்களை கடந்து விட்டது. இதுவரை இந்த போட்டியிலிருந்து ரவீந்தர் மற்றும் ஆர்னவ் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வாரம் மூன்று கட்டமாக நடைபெற்ற நாமினேஷன் ஃபிரீ டாஸ்கில் முதல் சுற்றில் ஆண்கள் அணி வெற்றி பெற்றிருந்தாலும், அடுத்த சுற்றில் பெண்கள் அணி வெற்றி பெற்றனர். இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோ படி, மூன்றாவது சுற்றிலும் பெண்கள் அணியே வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக வெளியான இரண்டாவது ப்ரோமோவில், பெண்கள் அணி கலந்து பேசி அந்த நாமினேஷன் ஃபிரீ பாஸை பவித்ராவிற்கு தரப்பட்டுள்ளது.
Twitter Post
Twitter Post
18ஆம் நாள் நிகழ்வுகள் ஒரு ரீகேப்
பிக்பாஸ் வீட்டில் 18ஆம் நாளில், ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் தொடர்ந்தது. ஆண்கள் அணியின் நிர்வாகிகளாக விளையாடிய நேரம் நிறைவு பெற்றதும், பெஸ்ட் மற்றும் ஒர்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ்-ஐ ரகசிய வாக்கெடுப்பு மூலம் ஹவுஸ்மெட்ஸ் தேர்வு செய்தனர். அந்த வகையில் சிறந்த போட்டியாளர்களாக அதிக வாக்குகளை பெற்றது முத்துக்குமரன், சுனிதா, அருண், பவித்ரா, சாச்சனா, ஜெஃப்ரி, ரஞ்சித், தர்ஷா குப்தா மற்றும் தர்ஷிகா. இவர்கள் அனைவரும் மீண்டும் பிக்பாஸ் ஸ்டார் ஹோட்டல் விருந்தினராகவும், ஒர்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ் மீண்டும் ஹோட்டல் நிர்வாகிகளாகவும் பொறுப்பேற்று விளையாட வேண்டும் என பிக்பாஸ் கூறினார்.
RJ ஆனந்திக்கும், முத்துகுமாரனுக்கும் மோதல்
முத்துக்குமரன், ஹோட்டல் முதலாளியின் மகனாக நடித்தார். RJ அனந்தி ரூம் சர்வீஸ் நிர்வாகியாகவும், சௌந்தர்யா மனேஜராகவும் நடித்தனர். அப்போது ஒரு சமயத்தில், ஆனந்தி கண்ணாடி கதவில் முட்டிக்கொண்டார். அப்போது முத்துக்குமார் ரியாக்ட் செய்த விதமும், அவர் பேசியது குறித்தும் RJ அனந்தி தனது அணியினரிடம் புகார் தெரிவித்து கண்கலங்கினார். இது நிகழ்ச்சியின் இறுதியிலும் விவாத பொருளாக மாறியது. அப்போது ஆனந்தி கோபத்துடன் வெளியேறி அறையில் சென்று உடைந்து அழுதார். அதற்கு முத்துக்குமரன் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தான் நடித்ததாக விளக்கமும் தந்தார். இது ஆனந்தியால் அரைமனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சௌந்தர்யா மீது விருந்தினர்கள் புகார்
விருந்தினர்கள் தங்கள் விமர்சனங்களை வைத்த போது பலரும் குறைகூறியது ஹோட்டல் நிர்வாகத்தின் மானேஜராக சௌந்தர்யாவை தான். ஒரு கட்டத்தில் சுனிதாவின் கருத்தினை சௌந்தர்யாவால் ஏற்றுகொள்ள முடியாமல், அவரும் சிரித்தபடியே பதில் கூற, இடைமறித்த அருண், விமர்சனங்களை பர்சனலாக எடுத்துக்கொள்ள கூடாது என விளக்க பார்த்தார். ஆனால், சௌந்தர்யா செவி சாய்க்கவில்லை. தொடர்ந்து சுனிதா மீதும், முத்துக்குமரன் மீதும் அவர் பதில் தாக்குதல் வைத்தார். இறுதியாக அவர் பதவி விலக வேண்டும் என பிக் பாஸ் அறிவித்தது. அதோடு நேற்றைய நிகழ்வும் முடிவடைந்தது.