NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பிக் பாஸ் தமிழ் சீசன் 8: நேற்று தனது நடிப்பால் ஹவுஸ்மேட்ஸை கவர்ந்த தர்ஷா
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிக் பாஸ் தமிழ் சீசன் 8: நேற்று தனது நடிப்பால் ஹவுஸ்மேட்ஸை கவர்ந்த தர்ஷா
    பிக் பாஸ் தமிழ் சீசன் 8 விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது

    பிக் பாஸ் தமிழ் சீசன் 8: நேற்று தனது நடிப்பால் ஹவுஸ்மேட்ஸை கவர்ந்த தர்ஷா

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 16, 2024
    01:19 pm

    செய்தி முன்னோட்டம்

    பிக் பாஸ் வீட்டில் ஆண்கள், பெண்கள் என்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டதால், அவர்களுக்கிடையில் உரசல்கள் மற்றும் சண்டைகள் அதிகமாக நிகழ்ந்து வருகின்றன, ஆனால் ஏதும் சுவாரசியமாக இல்லை என பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

    பொதுவாக வீட்டில் ரசிக்கும்படியான விஷயங்களை விட சின்ன சின்ன சண்டைகள் தான் மொத்தமாக நடந்து கொண்டிருக்கின்றன.

    இந்த நிலையில் நேற்று நடந்தவையை பார்க்கலாம்.

    நிகழ்வுகள்:

    ஜாக்குலின் மற்றும் முத்து இடையேயான சண்டை:

    தண்ணீர் எடுத்துக்கொள்ள அனுமதி கேட்க வேண்டும் என கண்டிஷன் விதித்த ஆண்கள் அணிக்கு எதிராக ஜாக்குலின் போர் கொடி தூக்கினர்.

    "ஏன்..கேட்டு எடுக்கறதுல உங்களுக்கு என்ன ஈகோ?" என்று அவரை முத்து சீண்ட,"ஈகோன்னு பெரிய வார்த்தைல்லாம் ஏன் சொல்றீங்க?" என்று கொதித்தார் ஜாக்குலின்.

    இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

    அடுத்து, தர்ஷா, ஆண்கள் அணிக்குச் சென்று, பெண்களுக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தார்.

    இதை கண்டு கொண்ட ஆண்கள், அவரை தவிர்த்தே டிஸ்கஷன் வைத்துக்கொள்ள வேண்டும் என விஷால் கூறினார்.

    அதன்பின்னர் பட்ஜெட் பஞ்சாயத்துகள், ஆண்கள் அணியிலும் சண்டை இடுவதில் முழு நோக்கத்தை செலுத்தும் தர்ஷா என நேற்றை எபிசொட் சென்றது.

    பிக்பாஸ் நல்ல டாஸ்க் தந்தால் ஒழிய இந்த சீசனை கரையேற்றுவது கடினமே!

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிக் பாஸ் தமிழ்

    சமீபத்திய

    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி
    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்

    பிக் பாஸ் தமிழ்

    பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இனி கமல்ஹாசன் தொடரப் போவதில்லையா? கமல்ஹாசன்
    பிக்பாஸ் தமிழ்: பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் அஸிம்; இரண்டாம் இடத்தை வென்ற விக்ரமன் விஜய் டிவி
    பிக்பாஸ் ஷெரின் திருமணத்தை அறிவித்தார் - எப்போது?  கோலிவுட்
    பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அறிவிப்பு, இன்று இரவு, 7:07 மணிக்கு வெளியாகிறது  விஜய் டிவி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025