பிக்பாஸ் தமிழ் சீசன் 8 50வது நாள்: எவிக்ட் ஆனார் வர்ஷினி, BB ஹவுசில் செய்யப்பட்ட மாற்றம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நேற்றுடன் தனது 50வது நாளை நிறைவு செய்தது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை அந்த வீட்டில் 18 போட்டியாளர்கள் உள்ளனர். நேற்றைய வீக்எண்ட் எபிசோடில் வர்ஷினி குறைவான வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டார். நேற்றைய நிகழ்வுகளின் ஹைலைட்ஸ் இதோ:
ராஜா-ராணி டாஸ்கினை ரெவ்யூ செய்த VJS
ராஜா-ராணி டாஸ்கில் ராஜா மற்றும் ராணி சரியாக செயல்பட்டனரா என்பதை ஹவுஸ்மேட்ஸிடம் கேட்டார் VJS. ஆனால், அனைவரும் ஒருசேர இந்த வாய்ப்பை ராஜாவும் ராணியும் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என கருத்து தெரிவித்தனர். தான் செயல்பட முயற்சித்ததாக ரானவ் கூறிய பதிலை விஜய் சேதுபதி ஏற்றுக்கொள்வதாக இல்லை. இரண்டு வாரங்கள் ஆன நிலையிலும் ரானவ் தனது விளையாட்டை இன்னும் துவங்கவில்லை என்பது VJS-இன் வாதம். மறுபுறம் சாச்சனா, கேள்வி தன் பக்கம் திரும்புவது அறிந்ததும், தான் சரியாக விளையாடவில்லை என முதலிலேயே ஒப்புக்கொண்டார். ஆனாலும், VJS சாச்சனாவிடம் தனி பிரியம் காட்டுவதாக மக்களின் அபிப்பிராயம். BB வீட்டில் அவர் தனக்கென தனி கவனிப்பு எதிர்பார்ப்பது தவறு என்பது அனைவரின் வாதம். அதை சாச்சனா உணர்வாரா?
ஷாப்பிங் டாஸ்கில் நடந்தது என்ன? யார் வெளியேறினார்?
அடுத்ததாக விஜய் சேதுபதி ஷாப்பிங் டாஸ்கின் போது நடந்தது என்ன எனக்கேட்டார். அதற்கும் ஹவுஸ்மேட்ஸ் மாறி மாறி பழி கூறிக்கொண்டனரே தவிர, தீர்க்கமாக ஒரு முடிவே எடுக்கவில்லை. ஒரு வழியாக தீர விசாரிக்காமல் சாச்சனாவை குறை கூறியது தவறு என தீர்ப்பு வழங்கிய விஜய் சேதுபதி அவ்வப்போது சத்யாவிடமும் அவர் செயல்படாமல் இருப்பதை உணர்த்தாமல் இல்லை. பின்னர் பிக்பாஸ் எவிக்ஷன் ப்ராசஸ் துவங்கியது. ஹவுஸ்மேட்ஸை கார்டன் ஏரியாவிற்கு வரச்செய்த BB, வர்ஷினி எலிமினேட் செய்யப்பட்டதை கூறினார். வர்ஷினியும் அதை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டு இல்லத்தினரிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டார். மேடையில் பேசிய VJS வர்ஷினி இந்த எவிக்ஷனை ஸ்போர்ட்டிவ்-ஆக எடுத்துக்கொண்ட விதத்தை பாராட்டினார்.
50வது ஒன்றிணைந்த BB ஹவுஸ் மற்றும் ரானவ் பிறந்தநாள் கொண்டாட்டம்
இறுதியாக பிக்பாஸ் தமிழ் சீசன் 8-இன் 50வது நாளன்று ஒரு மாற்றத்தை கொண்டுவருவதாக விஜய் சேதுபதி அறிவித்தார். அதன்படி இனி வீட்டில் பாய்ஸ் அணி, கேர்ள்ஸ் அணி என தனித்தனி அணிகள் இல்லை எனவும் இரு அணிகளும் ஒன்றிணைக்கப்பட்டு, தனித்தனி ஆட்டத்தை துவங்க வேண்டும் என கூறினார் VJS. அதன்படி லெப்ட், ரைட் என ஹவுஸ்மேட்ஸ் குலுக்கல் முறையில் பிரிக்கப்பட்டனர். இனியாவது ஆட்டம் சூடுபிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அடுத்ததாக நள்ளிரவு இல்லத்தின் ஒன்று கூடி ரானவிற்கு சர்ப்ரைஸாக பிறந்தநாள் கொண்டாடியதுடன் நேற்றைய நிகழ்ச்சி முடிந்தது.