பிக் பாஸ் தெலுங்குவில் ரஜினிக்கு ட்ரிபூட் செய்த நாகர்ஜுனா
செய்தி முன்னோட்டம்
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியினை நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்ற வார இறுதியில் நாகர்ஜுனா ரஜினிக்கு ட்ரிபியூட் செய்யும் விதமாகவும், ஓணத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாகவும், ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் இருந்து வெளியான 'மனசிலாயோ' என்ற பாடலுக்கு நடனமாடினார்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள 'வேட்டையன்' அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதில் நடிகர் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்பாடலை மறைந்த பழம்பெரும் பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை AI மூலம் பயன்படுத்தியுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Watch king @iamnagarjuna sir performing #Manasilaayo song on #BigBossTelugu💥#Vettaiyan 🕶️🦅#Rajinikanth #Superstar #Thalaivar pic.twitter.com/3n6F1tXc8i
— Rajini✰Followers (@RajiniFollowers) September 15, 2024