பிக் பாஸ் தமிழ் சீசன் 8: பரம எதிரிகளாக பார்க்கப்பட்ட போட்டியாளர்கள் உண்மையில் சகோதரர்களா?
விஜய் டிவியில் வெளியாகி வரும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் தற்போது 8வது சீசனில் உள்ளது. இரு மாதங்களுக்கு முன்னர் துவங்கிய இந்த நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற எவிக்ஷனில் ரஞ்சித் வெளியேற்றப்பட்டதால், தற்போது முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரஞ்சித், ராணவ், ஜெஃப்ரி, தீபக், அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், மஞ்சரி, செளந்தர்யா ஆகிய 12 பேர் எஞ்சி உள்ளனர். சென்ற வாரம் பிக்பாஸ் அறிவித்தது போல இந்த வாரம் நாமினேஷன் ஃபிரீ பாஸிற்கான டாஸ்க் ஏதும் நடைபெறவில்லை. மாறாக இந்த வாரம் பேமிலி வீக் தொடங்கியது. ஹவுஸ்மேட்ஸின் குடும்பத்தினர் அவர்களை BB ஹவுசில் சந்திக்கும் வாரம் இது.
அன்ஸீன் வீடியோவில் வெளியான ட்விஸ்ட்: அருணும், முத்துவும் பங்காளிகளா?
இல்லத்தில் இருந்தவர்களின் குடும்ப உறவுகள் ஒவ்வொருவராக தினமும் வந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று அருணின் அப்பாவும், அம்மாவும் வந்துள்ளனர். அப்போது அருணின் அப்பா, அருணும், முத்துகுமாரனும் சகோதரர் முறை கொண்ட பங்காளிகள் என கூறியுள்ளார். வெளியே இருந்து பார்க்கையில் அண்ணனும், தம்பியும் எதற்காக இப்படி மோதிக்கொள்கிறார்கள் என தோன்றுவதாகவும், இது குறித்த விவரங்களை தற்போது கூற இயலாது என்பதால், இருவரும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் இனி விளையாட வேண்டும் என கூறினார். இந்த செய்தி ஹவுஸ்மேட்ஸ் இடையே மட்டுமல்ல, வெளியே இருக்கும் இருவரின் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சி அன்ஸீன் கட்சியாக X -இல் பகிரப்பட்டுள்ளது. இத்தனை நாளாக கீரியும் பாம்புமாக இருந்த இந்த இரண்டு போட்டியாளர்கள் இனி ஆட்டத்தினை மாற்றுவார்களா?