பிக் பாஸ் தமிழ் சீசன் 8: ஃபேட்மேன் ரவியை வறுத்தெடுத்த தர்ஷிகா
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் 8 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கடந்த வார இறுதியில் அருண் பிரசாத் மற்றும் தீபக் ஆகியோர் எலிமினேட் ஆகினர்.
இது முற்றிலும் unfair என பலரும் கூறி வருகின்றனர். காரணம் அன்அபிஷியல் வாக்கெடுப்பு படி குறைவான வாக்குகள் பெற்றது VJ விஷால் மற்றும் பவித்ரா.
எனினும் அருண் மற்றும் தீபக் வெளியேற்றப்பட்டது யாருமே எதிர்பார்க்காத ஒன்று. இதற்கு காரணம் இந்த வாரம் முன்னாள் போட்டியாளர்கள் தர்ஷிகா, அன்ஷிதா ஆகியோர் பொங்கல் கொண்டாட்டமாக வீட்டிற்குள் வரவுள்ளனர்.
அப்போது TRP வேண்டும் என்பதற்காக அவர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர் என பலர் கருதிய நிலையில், இன்று முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் தர்ஷிகா வீட்டிற்குள் மீண்டும் வருகிறார்.
ப்ரோமோ
ரவீந்தரை எதிர்த்து நின்ற தர்ஷிகா
ஏற்கனவே ஆட்டத்தின் போக்கை மாற்றிவதாக விஜய் சேதுபதியின் கண்டிப்பிற்கு உள்ளான ரவீந்தர், போட்டியாளர்களின் மனநிலையை உடைப்பதாக கருத்துகள் வெளியாகின.
இந்த நிலையில், முதல் ப்ரோமோபடி, தர்ஷிகா உள்ளே நுழைந்ததும் அதிர்ச்சியில் உறைந்து நின்ற விஷாலிடம் நேராக சென்று சிரித்து கொண்டே கை குலுக்கினார்.
தொடர்ந்து, ரவிந்தரிடம் சென்று,"நான் விஷால் பெயரை டேமேஜ் செய்யவில்லை. அது எனக்கு தப்பா தெரிஞ்சது" எனக்கூற, ரவிந்தரோ,"நீ வெளிய ஒன்னு பண்ண, அதனால் தான் எல்லாரும் விஷாலை அடிக்குறாங்க" என்றார்.
உடனே டென்ஷன் ஆன தர்ஷிகா,"நீங்க என் வாழ்க்கையில் இனிமேல் தலையிடாதீர்கள்" என கத்த, ரவீந்தரும்,"நீ என்கிட்ட இப்படி பேசாத" என எகிறினார்.
தர்ஷிகவோ,"இது எனக்கும்,அவனுக்கும் இடையில் இருப்பது. இது சென்சிடிவ் இஷ்யூ. இதில் நீங்கள் தலையிடக்கூடாது" என்றார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Day99 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) January 13, 2025
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/p7ouBI8JJp