பிக் பாஸ் தமிழ் சீசன் 8: முன்னாள் போட்டியாளர் விஷ்ணுவிடம் ப்ரொபோஸ் செய்த சௌந்தர்யா
விஜய் டிவியில் வெளியாகி வரும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் தற்போது 8வது சீசனில் உள்ளது. இரு மாதங்களுக்கு முன்னர் துவங்கிய இந்த நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற எவிக்ஷனில் ரஞ்சித் வெளியேற்றப்பட்டதால், தற்போது முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரஞ்சித், ராணவ், ஜெஃப்ரி, தீபக், அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், மஞ்சரி, செளந்தர்யா ஆகிய 12 பேர் எஞ்சி உள்ளனர். சென்ற வாரம் பிக்பாஸ் அறிவித்தது போல இந்த வாரம் நாமினேஷன் ஃபிரீ பாஸிற்கான டாஸ்க் ஏதும் நடைபெறவில்லை. மாறாக இந்த வாரம் பேமிலி வீக் தொடங்கியது. ஹவுஸ்மேட்ஸின் குடும்பத்தினர் அனைவரும் நேற்று வரை வந்த நிலையில் இன்று அவர்களின் நண்பர்கள் வருவதாக கூறப்பட்டது.
முதல் ப்ரோமோவில் வெளியான ப்ரோபோசல் காட்சி
அந்த வகையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் முன்னாள் சீசனின் போட்டியாளரான விஷ்ணு வீட்டிற்குள் வந்தார். தற்போதைய போட்டியாளரான சௌந்தர்யாவிற்காக வந்திருந்தார். ஏற்கனவே அவரும், சௌந்தர்யாவும் காதலர்கள் என்ற பேச்சு இணையம் முழுவதும் பரவிய நிலையில், சௌந்தர்யா, விஷ்ணுவிற்கு 'will you marry me?' என ப்ரொபோஸ் செய்துள்ளார். இன்று போட்டியாளர்களின் நண்பர்களும், வேறு சில பிரபலங்களும் BB வீட்டிற்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அருண்-ஐ பார்க்க அவரின் காதலியும், சீசன் 7இன் டைட்டில் வின்னரான அர்ச்சனா வருவார் என கூறப்படுகிறது.