பிக்பாஸ் தமிழ் சீசன் 8:எலிமினேட் ஆன பின்னர் திமிர் கட்டிய அர்னவ்; சாட்டையை சுழற்றிய VJS
செய்தி முன்னோட்டம்
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 இரண்டாவது வார இறுதியில் குறைந்த ஓட்டுகளை பெற்றதற்காக அர்னவ் எலிமினேட் ஆகியுள்ளார்.
அதற்கு முன்னர் ஹவுஸ்மேட்ஸிடம் 'நீங்க தான் தைரியமான ஆள் ஆச்சே..கேளு' என்ற தலைப்பில், போட்டியாளர்கள் நீண்ட காலமாக மனதில் தேக்கி வைத்திருந்த கேள்விகளை கேட்குமாறு VJS கூறினார். ஒவ்வொருவரும் குறிப்பிட்ட ஒரு நபரை நோக்கி கேள்விகளை கேட்டனர்.
அப்போது அர்னவ், தர்ஷா குப்தாவை நோக்கி 'நான் ஆண்கள் அணி உங்களை மெண்டல் டார்ச்சர் செய்ய சொன்னதாக கூறினேனா?' என்றார். அந்த கேள்வியை அவர் கேட்ட விதமே, விஜய் சேதுபதி போன்ற மாடுலேஷனில் அவர் கேட்டார். அது பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
குரூப்
ஆண்கள் அணி vs ஆர்னவ்
இதனை அடுத்து, யாருக்கு பட்டங்களை வழங்குவீர்கள் என கேட்டதற்கு, ஆண்கள் அணி ஒரு சேர அனைத்து பட்டங்களையும் ஆர்னவிற்கு அளித்தனர்.
அதனை புன்முறுவலுடன் ஏற்று கொண்ட ஆர்னவ், ஆண்கள் அணியுடன் தனக்கு ஒரு சில விஷயங்களில் ஒத்து போகாததால், தான் தனித்து இருப்பதாகவும், மற்றபடி இந்த பட்டங்களை ஏற்றுக்கொள்வதாகவும் அங்கே தெரிவித்தார்.
விஜய் சேதுபதி அவரை பாராட்டினார்.
வெளியேற்றம்
இந்த வாரம் வெளியேறினார் அர்னவ்
இதனையடுத்து நேற்று குறைவான ஓட்டுகளை பெற்றதற்காக அர்னவ் வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. வெளிய வந்த அர்னவ்-விடம் உங்கள் மனதில் தோன்றுவதை ஹவுஸ்மேட்ஸிடம் பேசிவிட்டு விடைபெற்றுகொள்ளங்கள் என கூறப்பட்டது.
உடனே புது உத்வேகம் பெற்றது போல அர்னவ், மேடையிலேயே ஆண்கள் அணியை நோக்கி விஷத்தை கக்க துவங்கினார்.
பெண்கள் அணியினரை சேர்ந்தவர்கள் நல்லா விளையாட வேண்டும் என கூறிவிட்டு, ஆண்கள் அணியினரை "ஜால்ராஸ்" என நக்கலாக குறிப்பிட்டு, மேடையில் திமிராக பேசியவிதம் பார்வையாளர்களை மட்டுமின்றி விஜய் சேதுபதியையும் கடுப்பேற்றியது.
கண்டனம்
கண்டித்த விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி, இதுபோன்ற அநாகரீக பேச்சுக்கள் இந்த இடத்தில் இருக்கக்கூடாது என்று கூறி, அனைவரும் மரியாதையோடு பேச வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
மேலும் அவர்கள் தன்னுடைய ஹவுஸ்மேட்ஸ் என்றும், தன் முன்னாள் அவர்களை அவமதிப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கண்டித்தார்.
முடிவில், அர்னவ் ஆண்கள் அணியினரை குழுவாக விளையாட வேண்டாம் என சொல்லி சென்றார்.
ஆனால், விஜய் சேதுபதி, அவரிடம் பெண்கள் அணியினர் தான் உங்களை நாமினேட் செய்தவர்கள் எனக் கூறி மறுபடியும் ஒரு குட்டு வைத்தார்.
ஆர்னவின் செயலுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
சேது னா: இவன் யாருடா கோமாளி மொமெண்ட்!! 👌🏻👏🏻🔥#Aarnav get well soon!! 😆😂#BiggBossTamil #BiggBossTamil8 #BiggBoss #Arnav #VijaySethupathi pic.twitter.com/3OYWyFt6e9
— Vignesh HaRi TVK (@vigneshhari1) October 20, 2024