LOADING...
பிக் பாஸ் சம்யுக்தா, கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்து கொண்டார்
சம்யுக்தா, அனிருதா ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்து கொண்டார்

பிக் பாஸ் சம்யுக்தா, கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்து கொண்டார்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 27, 2025
02:05 pm

செய்தி முன்னோட்டம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 மூலம் பிரபலமான நடிகை மற்றும் மாடல் அழகியான சம்யுக்தா, முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்தை விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக முன்னர் நாங்கள் செய்தி வெளியிட்டிருந்தோம். அதே போல, இன்று காலை இருவருக்கும் நெருங்கிய உறவுகள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரும் சமீபத்தில் சம்யுக்தவின் வீட்டில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை சம்யுக்தா வெளியிட்டிருந்த போது இவர்களின் காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இருவரும் தீபாவளி பண்டிகையை ஜோடியாக கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் தங்கள் காதலை உறுதி செய்துள்ளனர் எனவும் சிலர் அப்போது தெரிவித்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்

சம்யுக்தா ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஒரு மகன் உள்ளார். அனிருதா ஸ்ரீகாந்தும் ஆர்த்தி வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து பெற்றவர். அனிருதாவின் முதல் மனைவி ஆர்த்தி வெங்கடேஷ், சம்யுக்தாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அனிருதா ஸ்ரீகாந்தும், சம்யுக்தவும் சில காலமாக காதலில் இருந்ததாகவும், தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் நடந்துள்ளது.