Loading...
திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக வழக்குப்பதிவு: பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் தலைமறைவு
திருமண மோசடி புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் தலைமறைவாகியுள்ளார்.

திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக வழக்குப்பதிவு: பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் தலைமறைவு

எழுதியவர் Vasuki
Nov 23, 2026
06:59 pm

செய்தி முன்னோட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் மேடைப்பேச்சுக்கள் மூலம் பிரபலமான முத்துக்குமரன் மீது, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதலில் நட்பாக பழகி பின்னர் திருமண ஆசை காட்டி உறவு வைத்துக்கொண்டு ஏமாற்றியதால், மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாக அப்பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகார் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், முத்துக்குமரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

5 நாட்களாக பூட்டப்பட்ட வீடு

செல்போன் எண்ணை வைத்துப் போலீசார் வலைவீச்சு

தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக அப்பெண் மீது முத்துக்குமரன் அளித்த புகாரை முகாந்திரம் இல்லை எனக் கூறி காவல்துறை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, அப்பெண்ணின் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், விசாரணைக்கு அஞ்சி அவர் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 5 நாட்களாக வீடு பூட்டிக்கிடப்பதால், அவரைத் தேடும் பணியில் விருகம்பாக்கம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அவரது செல்போன் சிக்னல் மற்றும் கடைசியாக தொடர்பு கொண்ட எண்களை ஆய்வு செய்து கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பிக்பாஸ் பிரபலம் மீதான இந்த வழக்கு சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT