
பார்க்கிங்கினால் வந்த சண்டை: சர்ச்சையில் சிக்கிய 'பிக்பாஸ்' பிரபலம் தர்ஷன்
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் மூலம் பரிச்சயமானவர் நடிகர் தர்ஷன்.
இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு தன்னை தாக்கியதாக உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஊடக தகவல்படி, தர்ஷன் சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் தனது வீட்டிற்கு அருகிலுள்ள 'டீ பாய்' என்ற டீக்கடையில் காரை பார்க் செய்து, டீ குடிக்க சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது மற்றொரு தரப்பு இளைஞர்களுடன் காரை பார்க் செய்வதில் மோதல் ஏற்பட்டதாகவும், அந்தச் சம்பவத்தில் தர்ஷன் சிலரை தாக்கியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தாக்கப்பட்டவர்களில் ஒருவர் நீதிபதியின் மகன் என தெரியவந்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
"நடிகர்னா பெரிய இவனானு கேக்குறாங்க .." கண்கலங்கி அழுத Biggboss தர்ஷன்#biggbossdharshan #parkingissue pic.twitter.com/BhWEWYQUw0
— Thanthi TV (@ThanthiTV) April 4, 2025
விவரங்கள்
இரு தரப்பும் காவல்நிலையத்தில் புகார்
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மகேஸ்வரி மற்றும் நீதிபதியின் மகன் ஆதிசுடி ஆகியோர் ஜேஜே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் தர்ஷனை விசாரித்து வருகின்றனர்.
அதேசமயம், தர்ஷன் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளன.
தற்போது ஆதிசுடி மற்றும் மகேஸ்வரி இருவரும் அண்ணா நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் சம்பவத்தை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தர்ஷன் தமிழ் திரையில் வளர்ந்து வரும் நடிகர் ஆவர். இதுவரை அவர் 'கூகிள் கட்டப்பா' உள்ளிட்ட ஓரிரு படங்களில் நடித்துள்ளார்.