பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் வெளியிட்ட முதல் வீடியோ!
செய்தி முன்னோட்டம்
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நேற்றுடன் நிறைவுற்றது.
அதன் தொடர்ச்சியாக இப்போட்டியின் வெற்றியாளர் முத்துக்குமரன் இன்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்ட முத்து,"வெற்றி கோப்பையின் கனம் அதிகமாக இருப்பதாகவும் மக்கள் தன் மீது இத்தனை அன்பு வைத்திருப்பார்கள் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை. அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை" என பேசியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முத்துக்குமரன் போட்டியாளராக உள்ளே நுழைந்த முதல் நாளில் இருந்தே அவரது பேச்சுக்கும், அவரது போட்டி மனப்பான்மைக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் வீட்டிற்குள்ளும், வெளியிலும் உருவகினர். ஆரம்பம் தொட்டே அவர் தான் டைட்டிலை வெல்வார் என ஆருடம் கூறிய நிலையில் நேற்று அவர் போட்டியில் வென்றார்.
பதிவு
இதயபூர்வ பதிவை வெளியிட்ட முத்து
விஜய் டிவியின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான முத்துக்குமரன் தொகுப்பாளராக யூடியூப் சேனலில் பணியாற்றி வந்தார். இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியாளராக வெளிவந்துள்ளார்.
தனது நன்றி வீடியோவில்,"ரொம்ப கனமா இருக்கு: என்னுடைய உழைப்புக்கும், முயற்சிக்கும் இந்தளவுக்கு தமிழக மக்கள் அன்பு செலுத்துவார்கள் என்று கொஞ்சமும் தான் எதிர்பார்க்கவில்லை. உள்ளே நண்பர்கள் எல்லாம் வந்து உங்களுக்கான ரெஸ்பான்ஸ் வெளியே நிறைய இருக்கு என்று சொல்லும் போது பெரிதாக தெரியவில்லை. ஆனால், வெளியே வந்து பார்க்கும் போது இவ்வளவு அன்பு எனக்கா? நிஜமாவே எனக்கா என எண்ணத் தோன்றுகிறது"
நிச்சயம் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை தன்னால் முடிந்த வழிகளில் காப்பாற்றுவேன் என்றும் முத்துக்குமரன் உறுதியளித்துள்ளார்.