NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஆளே மாறிப்போன விஜய் சேதுபதி; பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய கெட்டப்பில் அறிமுகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆளே மாறிப்போன விஜய் சேதுபதி; பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய கெட்டப்பில் அறிமுகம்
    பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக கெட்டப்பை மாற்றிய நடிகர் விஜய் சேதுபதி

    ஆளே மாறிப்போன விஜய் சேதுபதி; பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய கெட்டப்பில் அறிமுகம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 06, 2024
    07:54 pm

    செய்தி முன்னோட்டம்

    பிக் பாஸ் தமிழின் புதிய சீசன் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) மாலை தொடங்கியது. முந்தைய சீசன்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த கமல்காசன் விலகிய நிலையில், விஜய் சேதுபதி தொகுப்பாளராக பொறுப்பேற்றார்.

    வழக்கமாக தாடியுடன் காட்சியளிக்கும் நடிகர் விஜய் சேதுபதி, இந்த நிகழ்ச்சிக்காக தாடி மற்றும் மீசையை எடுத்துவிட்டு, புதிய கெட்டப்பில் வந்துள்ளார்.

    முன்னதாக, விஜய் டிவி சேனல் வெளியிட்ட சமீபத்திய ப்ரோமோவில், விஜய் சேதுபதி நம்பிக்கையுடன் பார்வையாளர்களிடம், "உங்கள் எதிர்பார்ப்புகளை நான் புரிந்துகொள்கிறேன்.

    இப்போது மேடை தயாராக உள்ளது, போட்டியாளர்கள் தயாராக உள்ளனர், உங்கள் புதிய தொகுப்பாளரும் தயாராகிவிட்டார்." எனக் கூறினார்.

    இந்த சீசனுக்கான தீம் பாடலை ராப்பர் அறிவு இசையமைத்துள்ள நிலையில், அதையும் விஜய் டிவி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    பிக் பாஸ் 8 தமிழ் சீசன் அறிமுக நிகழ்ச்சி

    களத்தில் சந்திப்போமா..😎 #GrandLaunch of Bigg Boss Tamil Season 8 - இன்று மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VJStheBBhost #VijaySethupathi 😍 #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision #Disneyplushotstartamil #VijayTV pic.twitter.com/oq1NNgakmt

    — Vijay Television (@vijaytelevision) October 6, 2024

    முதல் காட்சி

    பிக் பாஸ் சீசனின் முதல் காட்சி

    நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் காட்சிக்கு முன், முந்தைய பிக் பாஸ் போட்டியாளர்களான ஆர்த்தி, வனிதா விஜயகுமார், தாமரை, கூல் சுரேஷ், சுரேஷ் சக்ரவர்த்தி, சனம் ஷெட்டி மற்றும் விஷ்ணு விஜய் ஆகியோரிடம் பேசினார்.

    முன்னதாக, 2017 முதல் 2023 வரையிலான பிக் பாஸ் தமிழ் முதல் ஏழு சீசன்களை கமல் தொகுத்து வழங்கினார்.

    ஆகஸ்ட் மாதம், தனது திரைப்பட கமிட்மென்ட் காரணமாக நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்படும்.

    16 போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைவார்கள். 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் பின்னர் நுழைவார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிக் பாஸ் தமிழ்
    விஜய் டிவி
    விஜய் சேதுபதி

    சமீபத்திய

    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா
    அதிக மதிப்புள்ள சைபர் குற்றங்களுக்கு எதிராக இ-ஜீரோ எஃப்ஐஆர்; மத்திய உள்துறை அமைச்சகம் புதிய முயற்சி சைபர் கிரைம்
    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல் இந்தியா
    துருக்கிய ஃபேஷன் பிராண்டுகள் விற்பனையை நிறுத்தம்; இந்திய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிரடி துருக்கி

    பிக் பாஸ் தமிழ்

    பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இனி கமல்ஹாசன் தொடரப் போவதில்லையா? கமல்ஹாசன்
    பிக்பாஸ் தமிழ்: பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் அஸிம்; இரண்டாம் இடத்தை வென்ற விக்ரமன் விஜய் டிவி
    பிக்பாஸ் ஷெரின் திருமணத்தை அறிவித்தார் - எப்போது?  கோலிவுட்
    பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அறிவிப்பு, இன்று இரவு, 7:07 மணிக்கு வெளியாகிறது  விஜய் டிவி

    விஜய் டிவி

    விஜய் டிவி நிகழ்ச்சிகளின் வாய்ப்புக்காக பணம் எதுவும் கேட்பதில்லை என ட்விட்டரில் பதிவு டிரெண்டிங்
    பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 'டபுள் எவிக்ஷனில்' வெளியேறி இருக்கும் போட்டியாளர்கள் கமலஹாசன்
    'லொள்ளு சபா' ரசிகர்களே, நெட்பிளிக்ஸில் உங்களை மகிழ்விக்க மீண்டும் வருகிறார்கள் 'லொள்ளு சபா' குழு நெட்ஃபிலிக்ஸ்
    'டும் டும்' கெட்டி மேளம் முழங்க KPY பிரபலம் தீனாவிற்கு நடந்த திருமணம்!  கோலிவுட்

    விஜய் சேதுபதி

    நெட்ப்ளிக்சில் நாளை வெளியாகிறது ஜவான் திரைப்படத்தின் எக்ஸ்டெண்டெட் கட் இயற்கை
    தலைவர்171 திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி? ரஜினிகாந்த்
    ஜனவரி 12ல் வெளியாகும் விஜய் சேதுபதி-கத்ரீனா கைஃப்பின் 'மெரி கிறிஸ்மஸ்' திரைப்படம் இயக்குனர்
    விடுதலை-2 திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் டீ-ஏஜிங் தொழில்நுட்பம் வெற்றிமாறன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025