Page Loader
பிக்பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது
ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

பிக்பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது

எழுதியவர் Venkatalakshmi V
Jun 17, 2024
01:13 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் பிரதீப் ஆண்டனி, கடந்த பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி பிரபலமானவர். இவர் தனது நீண்ட நாள் காதலியுடன் திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்துள்ளார். பிக்பாஸ் 7வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப், அவரது நடத்தை காரணமாக சக போட்டியாளர்கள் மூலம் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். எனினும், அதன் பின்னர் அவருக்கு மக்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஒன்றிரண்டு படங்களை இயக்கவும் அவர் தயாராகி உள்ளார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், பிரதீப் ஆண்டனி தன்னுடைய நீண்ட நாள் காதலியுடன் எளிமையான முறையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம் நடத்தியுள்ளார். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் பிரதீப். இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

பிக்பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு நிச்சயதார்த்தம்!