இன்று தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 7- போட்டியாளர்கள் இதோ
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இன்று (அக்டோபர் 1) தொடங்குகிறது. இன்று மாலை 6:00 மணிக்கு தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், இந்த சீசனில், முதன்முறையாக இரு வீடுகள் இடம் பெற்றுள்ளன. போட்டியாளர்கள் பத்து பத்தாக பிரிக்கப்பட்டு இரு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனக் கூறப்படுகிறது.
பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக ஒரு எழுத்தாளர்
பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக ஒரு எழுத்தாளர் பங்கேற்கிறார். தமிழின் ஆகச்சிறந்த கதை சொல்லி மற்றும் எழுத்தாளரான பவா செல்லதுரை இம்முறை பிக்பாஸில் பங்கேற்கிறார். தற்போது ஆனந்த விகடனில் வெளியாகி வரும் 'சொல்வழிப் பயணம்' எனும் தொடர் மூலம் பிரபலமானார். பவா செல்லதுரை வால்டர், ஜெய் பீம், ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பிக்பாஸ் நுழைவு தனித்துவமாக பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களின் விபரம்- 1
நடிகர் கூல் சுரேஷ், நடிகை விசித்ரா, பிக்பாஸ் நான்காவது சீசனில் பங்கேற்ற பாலாஜி முருகதாஸின் குடும்ப நண்பர் அனன்யா ராவ். பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்த வினுஷா, பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன், மலேசிய தமிழ் பெண்ணான மூன் நிலா வழக்கமான வெளிநாட்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கிறார். குக் வித் கோமாளி புகழ் ரவீனா தாஹா, சீரியல் நடிகை நிவிஷா, பிக் பாஸ் அமீரை வளர்த்தவர்களின் மகள் ஐஷு உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். இது தவிர நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களின் விபரம்- 2
நடன கலைஞர் விஜய் வர்மா, விஜே அர்ச்சனா, சூழல் வெப் சீரிஸ் மூலம் பிரபலமான நடிகர் ஜான்சன். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான சத்யா சீரியலில் நடித்த சரவண விஷ்ணு, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த சரவணன். லவ் டுடே படத்தில் நடிகை இவானாவின் தங்கையாக நடித்த அக்ஷயா உதயகுமார், நடிகர் பால சரவணன், நடிகை உமா ரியாஸ் மற்றும் சாமானிய குடும்பத்தில் பிறந்து இசையமைப்பாளர் ஆன நிக்ஷன் உள்ளிட்டோர் இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்கிறார்கள்.