இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்
இசைக்கான உயரிய விருதான 'கிராமி' விருதை, பெங்களூரை சேர்ந்த ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக வென்றுள்ளார். ஸ்டீவர்ட் கோப்லேண்டுடன் இணைந்து இவர் வெளியிட்ட 'டிவைன் டைட்ஸ்' என்ற ஆல்பத்திற்க்காக இந்த விருது வழங்கப்பட்டது. 'Best Immersive Audio Album' என்ற அடிப்படையில், இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ரிக்கிக்கு இது மூன்றாவது கிராமி விருதாகும். இதற்கு முன்னதாக, 2022 -ஆம் ஆண்டிலும், 2015 -இல் 'விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா'விற்காகவும், இவர் கிராமி விருதை வென்றுள்ளார். இந்தியாவிலிருந்து, கிராமி விருதை வென்ற இளம் வயது மற்றும் 4வது இந்தியர், ரிக்கி ஆவார். 1981-ஆம் ஆண்டு பிறந்த கேஜ், 8 வயதிலிருந்து பெங்களூரில் வசித்து வருகிறார். இவர் பல் மருத்துவத்தில் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.