Page Loader
ஐஸ் பெட்டியில் பாதுகாக்கப்பட்ட ஏலியன் பொம்மை; 4,500 VFX காட்சிகள்: மிரள வைக்கும் அயலான் படத்தின் தகவல்கள்
வைரலாகும் அயலான் படத்தின் வியக்கவைத்தும் தகவல்கள்

ஐஸ் பெட்டியில் பாதுகாக்கப்பட்ட ஏலியன் பொம்மை; 4,500 VFX காட்சிகள்: மிரள வைக்கும் அயலான் படத்தின் தகவல்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 25, 2023
03:31 pm

செய்தி முன்னோட்டம்

சிவகார்த்திகேயன் நடிப்பில், பல ஆண்டுகளாக உருவாகி வந்த திரைப்படம் 'அயலான்'. இதன் ரிலீஸ் தேதி இரு தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த வருட தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாகிறது. இந்த படத்தை, 'இன்று நேற்று நாளை' புகழ், ஆர்.ரவிக்குமார் இயக்குகிறார். முதல் படத்திலேயே, அறிவியல் சார்ந்த புனைக்கதையை மையமாக கொண்டு இயக்கி இருந்தார். இந்த படமும் அதே போல, ஏலியன் பற்றிய கதை என்பது, படத்தின் போஸ்டர், டீஸர் ஆகியவற்றை பார்த்ததும் தெரிந்துகொள்ளலாம். ஒரு மனிதனுக்கும் வேற்றுகிரகவாசிக்கும் இடையிலான தனித்துவமான உறவை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இருப்பினும், இந்த படம் உருவாக எதற்காக இத்தனை ஆண்டுகள் ஆனது என்பதை, படத்தின் தயாரிப்பாளர் கோடபாடி ஜே ராஜேஷ் (கேஜேஆர்) சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

அயலான்

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏலியன் பொம்மை 

அயலான் திரைப்படத்தில், யதார்த்தமான சித்தரிப்பை உறுதி செய்வதற்காக, வெளிநாட்டிலிருந்து மூல பொருட்களை இறக்குமதி செய்து, கிட்டத்தட்ட ₹2 கோடி ரூபாய் செலவு செய்து, ஏலியன் பொம்மையை உருவாக்கயுள்ளனர். அந்த பொம்மைக்கு, சிஜி பயன்படுத்தி, உணர்ச்சிகளைச் சேர்த்துள்ளனர். "(அந்த ஏலியன் பொம்மையை) நாங்கள் ஒரு ஐஸ் பெட்டியில் பாதுகாத்துள்ளோம். படத்தின் ப்ரோமோஷன்களின் போது அதைப் பயன்படுத்துவோம், "என்று தயாரிப்பாளர் ராஜேஷ் கூறியுள்ளார். "அயலான் திரைப்படம், 4,500 VFX காட்சிகளைக் கொண்டுள்ளது. இது இந்தியத் திரையுலகில் முதல்முறையாகும். முன்னதாக, ஷங்கரின் 2. 0 படத்தில், 2,800 VFX காட்சிகள் பயன்படுத்தப்பட்டது," என அவர் மேலும் தெரிவித்தார். இதனால் தான் படம் வெளியாக ஐந்து வருடங்கள் ஆனது எனவும் அவர் கூறியுள்ளார்.