அட்லீ தயாரிப்பில் ஹீரோவாக களமிறங்கும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகவும், அந்தப் படத்தை பிரபல இயக்குநர் அட்லீ தனது சொந்தத் தயாரிப்பில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. வலைப்பேச்சு உள்ளிட்ட திரைத்துறை ஊடகங்கள் வெளியிட்டுள்ள இந்தச் செய்தி விஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அட்லீ இயக்கம்
ஹீரோவாக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்
திரைப்பட இயக்கம் பயின்று லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்த ஜேசன் சஞ்சய், தற்போது நேரடியாக கதாநாயகனாக களம் காணவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தை இயக்குநர் அட்லீயிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஒரு திறமையான அறிமுக இயக்குநர் இயக்கவுள்ளார் என்றும், ஒட்டுமொத்தத் திட்டத்தையும் மேற்பார்வையிட்டு, அட்லீயே தனது நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்து வழங்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், நடிகர்கள் தேர்வு, தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொடக்க விழா குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.