
அட்லீயின் அடுத்த படத்தில் இணையவிருக்கும் டாப் நடிகர்கள்: யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!
செய்தி முன்னோட்டம்
இந்திய சினிமாவையே மாற்றியமைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மெகா பிளான் ஒன்றை இயக்குனர் அட்லீ திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
இந்தியாவின் இரண்டு பெரிய சூப்பர் ஸ்டார்களான சல்மான் கான் மற்றும் கமல் ஆகியோரை வைத்து ஒரு டபுள் ஹீரோ திரைப்படத்தை இயக்க அவர் தயார் ஆகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு (2025) தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெயரிடப்படாத இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.
'ஜவான்' வெற்றியை தொடர்ந்து இப்படத்திற்கும் அனிருத் உடன் அவர் இணையவுள்ளார்.
கமல்ஹாசன் தொடர்ச்சியாக இளம் இயக்குனர்களுடன் கை கோர்த்து பான் இந்தியா படங்களில் நடிக்க கவனம் செலுத்து வருகிறார். விக்ரம், கல்கியை தொடர்ந்து அவர் அட்லீ உடன் இணையவுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Blockbuster Director ATLEE’s next 🔜🔥 pic.twitter.com/7YT4iqATXv
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 29, 2024