Page Loader
ஜவான் படத்தில், அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க அட்லீ தீர்மானம்?
பான் இந்தியா படமாக 'ஜவான்' படத்தை இயக்க அட்லீ முடிவு?

ஜவான் படத்தில், அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க அட்லீ தீர்மானம்?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 13, 2023
03:30 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் அட்லீ, ஹிந்தி படவுலகின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து 'பதான்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அதோடு இந்த படத்தில், தளபதி விஜய் ஒரு கெஸ்ட் ரோல் செய்யப்போவதாகவும் செய்திகள் வெளி வந்தன. இந்நிலையில், பான் இந்தியா வகையில் இந்த படத்தை எடுக்கும் ஒரு முயற்சியாக, இந்த படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. படக்குழுவிற்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், "படத்தின் கதைக்களத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பாத்திரம் அல்லுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்றுதான் பேச்சுவார்த்தை நடந்தது, அல்லு அர்ஜுன் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை."

ட்விட்டர் அஞ்சல்

ஜவானில் அல்லு அர்ஜுன் நடிக்கிறாரா?