Page Loader
நடிகர் அருண் பாண்டியனின் மகளை கரம் பிடிக்கிறார் நடிகர் அசோக் செல்வன் 
செப்டம்பர் 13ம் தேதி நெல்லையில் வைத்து திருமணம் நடைபெற உள்ளது

நடிகர் அருண் பாண்டியனின் மகளை கரம் பிடிக்கிறார் நடிகர் அசோக் செல்வன் 

எழுதியவர் Sindhuja SM
Aug 12, 2023
07:42 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட்: இளைய தலைமுறை ரசிகர்களை கவர்ந்து வரும் இளம் நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர் ஹிட்டான 'போர் தோழில்' திரைப்படத்தில் அசோக் செல்வன் கடைசியாக நடித்திருந்தார். அதற்கு முன், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் போன்ற பிரபல திரைப்படங்களில் அவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்நிலையில், அசோக் செல்வனுக்கும் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் வரும் செப்டம்பர் 13ம் தேதி நெல்லையில் வைத்து திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிஜிஓ

கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வனும் இணைந்து நடிக்கும் திரைப்படம் 

கீர்த்தி பாண்டியன் பழம்பெரும் நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் இளைய மகள் ஆவார். இவர் 'அன்பிற்கிணியால்' போன்ற சில படங்களில் இதற்கு முன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வனும் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் 'புளூ ஸ்டார்' திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். 'புளூ ஸ்டார்' திரைப்படமும் செப்டம்பரில் தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கீர்த்தி பாண்டியனின் தந்தை அருண் பாண்டியன், 1980-90களில் பிரபலமாக பேசப்பட்ட கோட்டை வாசல், ஊமை விழிகள், தேவன் போன்ற பிரபல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.