Page Loader
500 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை புரிந்தது நடிகர் விஜய்யின் அரபிக்குத்து!
வியூஸ்களை அள்ளும் அரபிக்குத்து

500 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை புரிந்தது நடிகர் விஜய்யின் அரபிக்குத்து!

எழுதியவர் Venkatalakshmi V
Jan 17, 2023
06:33 pm

செய்தி முன்னோட்டம்

சென்ற ஆண்டு வெளி வந்த, விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்றுள்ள, 'அரபிக்குத்து' பாடல், தற்போது 500 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை புரிந்துள்ளது. இந்த பாடல் வெளி வரும் முன்னரே, அதன் முன்னோட்ட வீடியோவும், லிரிக் வீடியோவும், உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. அதற்கு முக்கிய காரணம், அந்த பாடலின் வித்தியாசமான இசை, வரிகள் மற்றும் நடனம். இந்த பாடலின் இசையமைப்பாளர் அனிருத், நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் ஆவார். பாடலை எழுதியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த பாடல் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அதற்கு சான்றாகதான், தற்போது, இந்த பாடல் பல லட்சம் வியூஸ்களை பெற்றுள்ளது என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

அரபிக்குத்து பாடல்