Page Loader
AR ரஹ்மான்- சாய்ரா பானு பிரிவு குறித்து முதல்முறையாக மனம்திறந்த அவர்களின் பிள்ளைகள்
வதந்திகளுக்கு கண்டனம் தெரிவித்த AR அமீன் மற்றும் ரஹீமா ரஹ்மான்

AR ரஹ்மான்- சாய்ரா பானு பிரிவு குறித்து முதல்முறையாக மனம்திறந்த அவர்களின் பிள்ளைகள்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 22, 2024
04:06 pm

செய்தி முன்னோட்டம்

இசையமைப்பாளர் AR ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் தங்களது 29 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டதாக இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்தனர். ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்த இந்த செய்தி குறித்து அதன் பின்னர் பல்வேறு வதந்திகள் பரவ ஆரம்பித்தது. குறிப்பாக அவருடைய இசைக்குழுவில் இருந்த மோஹினி டேவும் அதே நேரத்தில் அவருடைய விவாகரத்து குறித்து அறிவித்ததும். இதனைத்தொடர்ந்து இருவரை குறித்தும் பல தவறான செய்திகள் யூட்யூபில் உலவ ஆரம்பித்தது. இது குறித்து இரு தரப்பினரும் எந்த வித பதிலும் கூறாத நிலையில் தற்போது AR ரஹ்மானின் பிள்ளைகள் இதற்கு காட்டமாக பதிலளித்துள்ளனர்.

கண்டனம்

வதந்திகளுக்கு கண்டனம் தெரிவித்த AR அமீன் மற்றும் ரஹீமா ரஹ்மான்

ரஹ்மானின் மகள் ரஹீமா ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்... வதந்திகள் வெறுப்பாளர்களால் கொண்டு செல்லப்படுகின்றன, முட்டாள்களால் பரப்பப்படுகின்றன, மற்றும் முட்டாள்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன" என்று ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதேபோல ஏ.ஆர் ரஹ்மானின் மகன் AR Ameen தன்னுடைய சமூக வலைதளத்தில், "எனது தந்தை ஒரு லெஜெண்ட். திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளால் மட்டுமல்ல. இத்தனை வருடங்களாக அவர் சமபதித்த மதிப்பு, மரியாதை மற்றும் அன்பு காரணமாக அவர் லெஜெண்ட். ஆதாரமற்ற வதந்திகள் பரவுவதை பார்க்கும் போது மனம் உடைகிறது. ஒருவரின் வாழ்க்கை பற்றி பேசும்போது உண்மையின் முக்கியத்துவத்தையும் மரியாதையையும் அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும். பொய்யான தகவல் பகிர்வதை தவிர்க்கவும். அவரின் கண்ணியத்தை மதித்து அதை காக்க வேண்டும்" என்றார்.