
நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய விவகாரம்: மாணவர் இடைநீக்கம், மன்னிப்பு கேட்ட மாணவர் சங்கம்
செய்தி முன்னோட்டம்
இரு தினங்களுக்கு முன்னர், கல்லூரி விழாவில் பங்கு பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளியிடம், ஒரு இளைஞர் அத்துமீறிய விவகாரம் பூதாகரமாக வெடித்தபின், அக்கல்லூரியின் மாணவர் சங்கம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது.
மேலும் சம்மந்தப்பட்ட அந்த மாணவன், தற்காலிக இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எர்ணாகுளம் சட்டக் கல்லூரியின் விழா ஒன்றிற்கு, நடிகை அபர்ணா பாலமுரளி பங்கு பெற சென்றிருந்தார். 'தங்கம்' படத்தின் விளம்பரத்திற்காக, அபர்ணாவுடன், இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் சிலரும் உடன் இருந்தனர்.
அப்போது, மேடை மேலே ஏறிய மாணவர் ஒருவர், அபர்ணாவிடம் கை குலுக்கினார். தொடர்ந்து, அவருடன் புகைபடம் எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
நடிகையிடம் அத்துமீறிய மாணவன்
#Kerala: #LawCollege #unionLeader, #inappropriately touches #AparnaBalamurali, a #nationalAward winning #actress
— YegyaSenl YuIiya (@Ayagya_YuIlya) January 20, 2023
:
What if it happens in #UP #Maha #Assam #Karnataka ? pic.twitter.com/MdYvlTkJ9Z
நடிகை அபர்ணா
மன்னிப்பு கோரிய மாணவர் சங்கம்
அதற்கு சம்மதித்த அபர்ணா, எழுந்து நின்றதும், அவர் தோளின் மேலே கை போட முயன்றார் அம்மாணவர். அதிர்ச்சி அடைந்த அபர்ணா, விலகி நின்றார்.
மாணவரின் இந்த செயலை, உடன் சென்ற படக்குழுவினர் கண்டித்ததாகவும், கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், அதே வீடியோவில், தொடர்ச்சியாக அம்மாணவர், அபர்ணாவிடம் மீண்டும், கை குலுக்கி, பேச முயன்றார். ஆனால் அபர்ணா மறுத்துவிட்டார்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி, பலத்த கண்டனத்தை ஈர்த்தது.
அதன் தொடர்ச்சியாக, எர்ணாகுளம் சட்ட கல்லூரி மாணவர்கள் சங்கம், அதனுடைய பேஸ்புக் பக்கத்தில், அபர்ணாவிடம் மன்னிப்பு கோரி, ஒரு பதிவிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
அத்துமீறிய மாணவன் இடைநீக்கம்
Totally unacceptable. Never take anyone for granted.....!
— Voice of voiceless💢 (@nikhzofficial) January 20, 2023
This incident happens at a law college and Finally the college suspended the Student !#AparnaBalamurali pic.twitter.com/S8vsKHmEVf