NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / அனுராக் காஷ்யப், ஜி.வி.பிரகாஷ் இணையவுள்ள 8 பாகங்கள் கொண்ட திரில்லர் தொடர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அனுராக் காஷ்யப், ஜி.வி.பிரகாஷ் இணையவுள்ள 8 பாகங்கள் கொண்ட திரில்லர் தொடர்
    விரைவில் இதனை உறுதிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    அனுராக் காஷ்யப், ஜி.வி.பிரகாஷ் இணையவுள்ள 8 பாகங்கள் கொண்ட திரில்லர் தொடர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 12, 2024
    07:20 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரபல திரைப்பட தயாரிப்பாளர்- இயக்குனர்-நடிகர் அனுராக் காஷ்யப் மற்றும் இசையமைப்பாளர்-நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் எட்டு பாகங்கள் கொண்ட த்ரில்லர் வெப் தொடரில் இணைய ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

    டிசம்பர் 2023 முதல் சாத்தியமான ஒத்துழைப்பைப் பற்றி யோசித்து வரும் இந்த ஜோடி, விரைவில் இதனை உறுதிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிங்க்வில்லா அறிக்கையின்படி, இந்தத் தொடரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த ஆண்டின் பிற்பகுதியில் GV பிரகாஷின் பான்-இந்தியன் படமான 'கிங்ஸ்டன்'-இன் வெளியீட்டிற்கு பிறகு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வரலாறு

    அனுராக் காஷ்யப், GV பிரகாஷின் கடந்தகால ஒத்துழைப்புகள்

    அனுராக் காஷ்யப் மற்றும் பிரகாஷ் வெற்றிகரமான கூட்டுப்பணியில் சாதனை படைத்துள்ளனர். அவர்கள் முன்பு சில படங்களில் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

    GV பிரகாஷ், அனுராக் காஷ்யப்பின் 'கேங்க்ஸ் ஆஃப் வசேபூர் 1' மற்றும் 2 படங்களுக்கு பின்னணி இசையை உருவாக்கினார்.

    அவர்கள் அனுராக் காஷ்யப்பின் 2013 திரைப்படமான அக்லியில் இணைந்து பணியாற்றினார்கள். அதிலும் GV தான் இசையமைத்தார்.

    இந்த நிலையில் எதிர்வரும் உத்தேச வெப் சீரிஸை ஸ்ட்ரீமிங் செய்வதற்கான தளம் இன்னும் வெளியிடப்படவில்லை, அதிகாரப்பூர்வ திட்ட உறுதிப்படுத்தல் நிலுவையில் உள்ளது.

    வேலை

    காஷ்யப் மற்றும் பிரகாஷின் தற்போதைய திட்டங்கள்

    காஷ்யப் மற்றும் பிரகாஷ் இருவரும் தற்போது வேறு பல திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    அனுராக் காஷ்யப் கடைசியாக விஜய் சேதுபதியின் மஹாராஜாவில் நடித்தார். தமிழில் ஒன் 2 ஒன் மற்றும் ஆஷிக் அபு இயக்கத்தில் மலையாளத்தில் அவரின் அறிமுக படமான ரைபிள் கிளப் போன்ற படங்களில் பணியாற்றி வருகிறார்.

    மறுபுறம், பிரகாஷ் கடைசியாக ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கிய டியர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    கிங்ஸ்டனைத் தவிர, இடிமுழக்கம் மற்றும் 13 போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளார்.

    அதேபோல் வியாழன் (ஆகஸ்ட் 15) திரையரங்குகளில் வெளியாகும் சீயான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படத்தில் GV பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜிவி பிரகாஷ் குமார்
    ஓடிடி

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    ஜிவி பிரகாஷ் குமார்

    கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா தனுஷ்
    ஜி.வி.பிரகாஷின் 'ரிபெல்' படத்தின் டீசரை வெளியிட்டார் நடிகர் சூர்யா நடிகர் சூர்யா
    தனுஷ் பாடியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது  தனுஷ்
    தமிழில் ஜிவி பிரகாஷை இயக்கப்போகும் அனுராக் காஷ்யப்  தமிழ் திரைப்படம்

    ஓடிடி

    நெட்ப்ளிக்சில் நாளை வெளியாகிறது ஜவான் திரைப்படத்தின் எக்ஸ்டெண்டெட் கட் இயற்கை
    தமிழ் சினிமாவின் இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீடுகள் நெட்ஃபிலிக்ஸ்
    தமிழின் இந்த வார திரையரங்க மற்றும் ஓடிடி வெளியீடுகள்  விஜய்
    உள்ளடக்கங்கள் மீது ஓடிடி தளங்களின் சுய மதிப்பீட்டை வேண்டும் மத்திய அரசின் புதிய 'ஒளிபரப்புச் சட்டம்' திரைப்படம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025