மூன்றாவது முறையாக அனிருத்துடன் கைகோர்க்கும் நானி; தி பாரடைஸ் படத்தில் இணைந்து பணியாற்றுவதாக அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் நானி, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருடன் இணைந்து தனது வரவிருக்கும் படமான தி பாரடைஸ் படத்திற்காக மீண்டும் ஒருமுறை இணைந்து பணியாற்ற உள்ளார்.
ஏற்கனவே ஜெர்சி மற்றும் கேங் லீடர் ஆகியவற்றில் வெற்றிகரமான கூட்டணியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக இருவரும் இணைந்து பணியாற்றுவதை இது குறிக்கிறது.
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், தி பாரடைஸ் ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா (எஸ்எல்வி) சினிமாஸ் தயாரிக்கிறது.
படம் தற்போது ப்ரீ புரொடக்ஷன் நிலையில் உள்ளது, நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023இல் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டைப் பெற்ற தசரா திரைப்படத்திற்குப் பிறகு இருவரும் இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைகின்றனர்.
ஹாட்ரிக்
ஹாட்ரிக் வெற்றிக்கு திரும்பியதாக நானி கருத்து
இந்தச் செய்தியை சமூக வலைதளங்களில் அறிவித்த தெலுங்கு நடிகர் நானி, "ஹாட்ரிக் வெற்றிக்கு திரும்பியுள்ளோம். இது சிறப்பானதாக இருக்கும்" என்று தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவில் ஆர்வத்தைத் தூண்டி உள்ளது.
அவர்கள் படத்தின் ஒலிப்பதிவை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
மிகச்சிறப்பான வரவேற்பைக் பெறும் பாடல்களை உருவாக்கி நற்பெயரை பெற்றுள்ள அனிருத் இருப்பதுதான் இதற்கு காரணமாகும்.
இதற்கிடையில், நானி தனது அடுத்த படமான ஹிட்: தி தேர்ட் கேஸ் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார். இது அவரது வரவிருக்கும் படங்களைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.