கவின்- டான்ஸ் மாஸ்டர் சதிஷ் -அனிருத் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் துவங்கியது
டான்ஸ் மாஸ்டர் சதிஷ் கோலிவுட்டில் பிரபலமானவர். பல பாடல்களுக்கு நடனம் அமைத்தது மட்டுமின்றி, ஒரு சில படங்களில் துணை வேடங்களிலும், காமெடி வேடங்களிலும் நடித்திருந்தார். சென்ற ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்திலும் நடித்திருந்தார். அவர் தற்போது இயக்குனர் அவதாரம் எடுக்க போவதாக சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. அந்த படத்தில் நாயனாக நடிக்கவிருப்பது கவின். இந்த புதிய படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் துவங்கியது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் அந்த பெயிரடப்படாத புதிய படத்திற்கு இசையமைக்கவிருப்பது அனிருத் ரவிச்சந்தர். இந்த செய்தியை கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தை தயாரிக்கவிருப்பது 'ரோமியோ பிக்சர்ஸ்'ஸின் ராகுல். இது அவரது மூன்றாவது தயாரிப்பாகும்.