Loading...
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்: நவம்பரில் கிரீஸில் கோலாகலமாக நடைபெற உள்ளதாக தகவல்
அனிருத் - காவ்யா மாறன் திருமணம் நவம்பரில் கிரீஸில் நடைபெற உள்ளதாக தகவல்

அனிருத் - காவ்யா மாறன் திருமணம்: நவம்பரில் கிரீஸில் கோலாகலமாக நடைபெற உள்ளதாக தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 16, 2026
05:23 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத் மற்றும் பிரபல தொழிலதிபரான காவ்யா மாறன் திருமணம் குறித்த பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் தீயாகப் பரவி வருகின்றன. வலைப்பேச்சு வெளியிட்ட செய்தியின்படி, கோலிவுட் மற்றும் கார்ப்பரேட் உலகைச் சேர்ந்த இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் வரும் நவம்பர் 11-ஆம் தேதி ஐரோப்பிய நாடான கிரீஸில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில முக்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் இந்தத் டெஸ்டினேஷன் வெட்டிங் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

வரவேற்பு

சென்னையில் நட்சத்திர வரவேற்பு நிகழ்ச்சி

கிரீஸில் நடைபெறும் திருமணத்தை தொடர்ந்து, வரும் நவம்பர் 14-ஆம் தேதி சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் தொழிலதிபா்கள் பலர் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திருமணத்திற்கான அழைப்பிதழ்களை வழங்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தமிழக முதல்வர் விஜய் மற்றும் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களை நேரில் சந்தித்துத் திருமண அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

இந்தத் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT