
பில்போர்டில் ஜவான் படப்பாடல்; அனிருத் பகிர்ந்த ஹாப்பி நியூஸ்
செய்தி முன்னோட்டம்
இசையமைப்பாளர் அனிருத்திற்கு இது சுக்ர திசை போலும். அவர் தொட்டதெல்லாம் வெற்றியே.
சமீபகாலத்தில் அவர் இசையில் வெளியான அனைத்து படப்பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.
தற்போது, அனிருத் இசையில் வெளியான 'ஜவான்' படத்தின் பாடல்கள், இந்தியா மட்டுமின்றி, ஜப்பான், அமெரிக்கா என அயல்நாடுகளிலும் பிரபலமாகியுள்ளது.
இந்த நிலையில், அனிருத் இசையமைத்த அந்த படத்தில் இடம்பெற்ற பாடலான 'சல்லேயா', 'பில் போர்டு'-இல் இணைந்துள்ளதை அனிருத் தனது எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
பில் போர்டு எனப்படுவது, உலகளவில் பிரபலமான பாடல்களை பட்டியலிடும் ஒரு தளம்.
இசையமைப்பாளர்கள் மத்தியில் அதில் இடெம்பெறுவது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
அந்த நிலையில், தற்போது அனிருத் இசையமைத்த பாடல், உலக அளவில் டாப் 100 -இல் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
உலகளவில் 97வது இடத்தை பிடித்த சல்லேயா
#Chaleya continues to take major success over global charts! 😎
— Anirudh FP (@Anirudh_FP) September 20, 2023
Debuts at #𝟵𝟳 at the @billboardcharts this week at #BillboardGlobal200.
Chart dated September 23 , 2023.@anirudhofficial @arijitsingh @shilparao11 @tseries @RedChilliesEnt pic.twitter.com/p2qCUGOBEz