
இது கல்யாண பத்திரிகையா? கோவிலா? வைரலாகும் அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமண அழைப்பிதழ்
செய்தி முன்னோட்டம்
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்க்கும் வரும் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது.
ஏற்கனவே ப்ரீ-வெட்டிங் செலிப்ரஷன் என்ற பெயரில் மாபெரும் நட்சத்திர கொண்டாட்ட நிகழ்ச்சிகளை அம்பானி நடத்தி வரும் நிலையில், இவர்களது ஆடம்பரமான திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் கலாச்சாரமும், பக்தியையும் ஒன்றிணைத்து மினி கோவில் போன்றதொரு வடிவில் பத்திரிகை தென்படுகிறது.
அதோடு, தங்க விக்ரஹம், பட்டு வஸ்திரம், வெள்ளி கோவில் விமானம் என பிரமாண்டமாக தோற்றமளிக்கிறது கல்யாண பத்திரிகை.
ட்விட்டர் அஞ்சல்
அம்பானி வீட்டு கல்யாணம்
#AnantAmbani and Radhika Merchant’s wedding invite is a sight to behold—gold idols, silver temple—a true symbol of luxury! #AnantRadhikaWedding @AmbaniHu pic.twitter.com/pLcUiXVnzX
— Backchod Indian (@IndianBackchod) June 27, 2024
திருமண நிகழ்வுகள்
மூன்று நாள் திருமண கொண்டாட்டம்
வரும் ஜூலை 12, வெள்ளியன்று மங்களகரமான சுப விழா அல்லது திருமண விழாவுடன் முக்கிய விழாக்கள் தொடங்கும்.
இதைத் தொடர்ந்து ஜூலை 13 ஆம் தேதி சுப் ஆஷிர்வாத் அல்லது தெய்வீக ஆசீர்வாத விழாவும், ஜூலை 14 ஆம் தேதி மங்கள் உத்சவ் அல்லது திருமண வரவேற்பு நிகழ்ச்சியுடன் முடிவடையும்.
இந்த திருமண அழைப்பிதழ் இந்த மூன்று நாள் நிகழ்வுகளின் வெவ்வேறு செயல்பாடுகளின் விவரங்களுடன் துண்டுப் பிரசுரங்களையும் காட்டுகிறது.
மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் தான் திருமணம் நடைபெறவுள்ளது.
இதற்காக உலகெங்கும் உள்ள அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் வரவிருக்கின்றனர் என கூறப்படுகிறது.