Page Loader
அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு; மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்
பரிசோதனைக்குப் பிறகு, நடிகருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய அறிவுறுத்தப்பட்டது

அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு; மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 15, 2024
03:28 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அறிக்கைகளின்படி, 81 வயதான நடிகர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் எனவும், இன்று மூச்சுத் திணறல் இருப்பதாக தெரிவித்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சோதனைக்காக கோகிலாபென் மருத்துவமனைக்கு சென்ற அவர், தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன. பரிசோதனைக்குப் பிறகு, நடிகருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மருத்துவ செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது எனவும், அமிதாப் குணமடைந்து வருகிறார் எனவும் செய்திகள் கூறுகின்றன. கவனிக்க: ஆஞ்சியோபிளாஸ்டி என்பது இதயத்தைச் சுற்றி செல்லும் ரத்த நாளங்களில் உள்ள அடைப்பை நீக்கவும், நாளத்தை அகலப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் மருத்துவ செயல்முறை.

ட்விட்டர் அஞ்சல்

அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு