வைரலான ராஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோ- சட்ட நடவடிக்கை கோரும் அமிதாப்பச்சன்
செய்தி முன்னோட்டம்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நடிகை ரஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோவுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமிதாப்பச்சன் கோரியுள்ளார்.
சரி பார்க்கப்பட முடியாத வீடியோவில், ரஷ்மிகா மந்தனா லிப்டுக்குள் வருவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், ரசிகர்கள் இது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்பதை கண்டறிந்தனர்.
இது போலி வீடியோ என்பதை உறுதி செய்த அபிஷேக் என்ற பத்திரிகையாளர், "இந்தியாவில் டீப்ஃபேக்கைக் கையாள்வதற்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பின் அவசரத் தேவை உள்ளது."
"நடிகை ராஷ்மிகா மந்தனாவின் இந்த வைரல் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பார்த்திருப்பீர்கள். ஆனால் காத்திருங்கள், இது ஜாரா பட்டேலின் டீப்ஃபேக் வீடியோ" எனக் கூறியிருந்தார்.
2nd card
திரையில் பிஸியாக உள்ள அமிதாப்பச்சன்
அமிதாப்பச்சன் அந்த பத்திரிக்கையாளரின் பதிவை ரீட்வீட் செய்து, இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
"ஆமாம் இது சட்டப்பூர்வமான ஒரு வலுவான வழக்கு," என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த சர்ச்சை குறித்து ரஷ்மிகா இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த வீடியோ, பிரிட்டிஷ் இந்தியரான ஜாரா பட்டேல் என்பவரின் வீடியோ என, பத்திரிக்கையாளர் அபிஷேக் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திரையில் பிஸியாக உள்ள அமிதாப்பச்சன் தற்போது, 'கோன் பனேகா குரோர்பதி' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார்.
முன்னதாக அவர், ரஜினிகாந்த் உடன் 33 ஆண்டுகளுக்கு பின் இணையும் 'தலைவர்170' படப்பிடிப்பை முடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
வைரல் ஆகி வரும் மார்பிங் செய்யப்பட்ட ராஷ்மிகா மந்தனா காட்சிகள்
yes this is a strong case for legal https://t.co/wHJl7PSYPN
— Amitabh Bachchan (@SrBachchan) November 5, 2023