LOADING...
ரஜினியின் 'கூலி' படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதை உறுதி செய்த அமீர்கான்
'கூலி' படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதை உறுதி செய்த அமீர்கான்

ரஜினியின் 'கூலி' படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதை உறுதி செய்த அமீர்கான்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 12, 2025
10:03 am

செய்தி முன்னோட்டம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியீட்டிற்கு தயாராகி வரும் 'கூலி' படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர் ஆகியோர் நடிக்கின்றனர். இதனை படத்தின் டீசரும் உறுதி செய்தது. இந்த நிலையில் படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பதாக செய்திகள் கசிந்தன. இதனை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்தனர். இந்த நிலையில் ஜூம் ஊடகத்தில் நடத்தப்பட்ட ரசிகர் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய 'சித்தாரே ஜமீன் பர்' படத்தின் ப்ரோமோஷனுக்காக அமீர்கான் கலந்து கொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் கூலி படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி கேட்டார்.

பதில்

"லோகேஷிடம் கதை கேட்காமல் ஓகே சொல்லிவிட்டேன்"

ரசிகரின் கேள்விக்கு சிறிது கொண்டே தயங்கி பதிலளித்தார் அமீர்கான். "நான் இதை வெளியிடக்கூடாது. ஆனால் நீங்கள் என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டிர்கள். ஆம், நான் லோகேஷ் இயக்கத்தில், கூலி படத்தில் கேமியோ வேடத்தில் நடிக்கிறேன். லோகேஷ் என்னிடம் முதலில் ரஜினி சார் படத்தில் சிறிய வேடத்தில் நடிக்க முடியுமா என கேட்டார். உடனே நான் ஓகே சொல்லிவிட்டேன். ரஜினி சார் உடன் நடிக்கும் வாய்ப்பு போதும் என படத்தின் கதையை கூட நான் கேட்கவே இல்லை" என்றார். "எனக்கு ரஜினி சாரை தனிப்பட்ட முறையில் மிகவும் பிடிக்கும். அவர் மீது அளவுகடந்த அபிமானமும், மரியாதையும் உண்டு. நான் ரஜினி சாரின் பெரிய ஃபேன்" என மேலும் தெரிவித்தார். இந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.