Page Loader
திருமணத்திற்கு தயாராகிறாரா அமலா பால்? 
திருமணத்திற்கு தயாராகிறாரா அமலா பால்?

திருமணத்திற்கு தயாராகிறாரா அமலா பால்? 

எழுதியவர் Venkatalakshmi V
Oct 26, 2023
01:20 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 2014ஆம் ஆண்டு, நடிகை அமலா பால், இயக்குனர் A.L.விஜய்-ஐ காதலித்து திருமணம் செய்தார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 3 ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பின்னர், A.L.விஜய் மறுமணம் செய்து கொண்டார். ஆனால், அமலா பாலோ, சிங்கிளாகவே இருந்தார். தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லையெனவும், ஆன்மீக வழியில் பயணிப்பதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தெரிவித்து வந்தார். இந்த நிலையில், திடீரென பவ்நிந்தர் சிங் என்பவரை திருமணம் செய்துகொள்வது போன்ற புகைப்படங்களை பதிவேற்றி அதிர்ச்சி தந்தார். சில மாதங்களிலேயே அது ஒரு விளம்பரபடத்திற்காக எடுத்த புகைப்படம் என்றும், அதை வைத்து அந்த நபர் மிரட்டுவதாகவும், அவன் ஒரு மோசடி பேர்வழி எனவும் வழக்கு தொடுத்தார்.

card 2

காதலில் விழுந்த அமலா பால்

இந்த நிலையில், அமலா பாலின் பிறந்தநாள் அன்று, அவர் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு இட்டுள்ளார். அதில், ஜெகத் தேசாய் என்பவர், உணவகம் ஒன்றில் நடனமாடி, அமலா பாலுக்கு மோதிரம் தந்து ப்ரொபோஸ் செய்கிறார். அமலா பாலும் அதை ஏற்றுக்கொண்டார். இந்த வீடியோ-வை பதிவேற்றி, #WeddingBells என குறிப்பிட்டுள்ளார் அமலா பால். அதே போல, அமலா பாலின் காதலர் தேசதையின் இன்ஸ்டாகிராம் பதிவில் "என்னுடைய ஜிப்ஸி ராணி ஓகே சொல்லிவிட்டாள். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் காதலே" என குறிப்பிட்டுள்ளார். அதனால், விரைவில் அமலா பாலின் திருமண அறிவிப்பு வெளிவரும் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Instagram அஞ்சல்

திருமணத்திற்கு தயாராகிறாரா அமலா பால்?