Page Loader
அல்லு அர்ஜுன், அலியா பட், ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர் ஜனாதிபதி கையால் தேசிய விருதை பெற்றனர்
தெலுங்கு சினிமாவில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற முதல் நடிகர் அல்லு அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது

அல்லு அர்ஜுன், அலியா பட், ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர் ஜனாதிபதி கையால் தேசிய விருதை பெற்றனர்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 17, 2023
05:32 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை அலியா பட், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டவர்கள், இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு கையால், இந்தாண்டின் தேசிய திரைப்பட விருதை பெற்றுக்கொண்டனர். 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை வென்றவர்களில் அல்லு அர்ஜுன் (சிறந்த நடிகர்), ஆலியா பட் மற்றும் கிருத்தி சனோன் (சிறந்த நடிகை) உள்ளிட்டோர் விருதுகளை பெற்றுக்கொண்டனர். நடிகர் மாதவன் இயக்கி, தயாரித்து, நடித்த, ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் சிறந்த திரைப்படத்திற்கான விருதை மாதவன் பெற்றுக்கொண்டார். அதேபோல, 'கருவறை' என்ற குறும்படத்திற்கான சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றார் ஸ்ரீகாந்த் தேவா

embed

சிறந்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா 

#Clicks | தேசிய விருது வென்றார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா!#SunNews | #69thNationalFilmAwards | #SrikanthDeva pic.twitter.com/dIe2hieBh5— Sun News (@sunnewstamil) October 17, 2023

embed

சிறந்த நடிகர் அல்லு அர்ஜுன்

#WATCH | Allu Arjun receives the Best Actor Award for 'Pushpa: The Rise', at the National Film Awards. pic.twitter.com/FemqdiV41y— ANI (@ANI) October 17, 2023