LOADING...
ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விடாமுயற்சி அப்டேட்!

ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விடாமுயற்சி அப்டேட்!

எழுதியவர் Venkatalakshmi V
Jan 31, 2025
01:36 pm

செய்தி முன்னோட்டம்

வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி'. பல தடைகளை தாண்டி இப்படம் வெளியாகவுள்ளதை நினைத்து அஜித்தின் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் இருக்கையில், நேற்று இரவு சர்ப்ரைஸாக விடாமுயற்சி படத்தின் ட்ரைலரின் BTS வீடியோ வெளியாகியுள்ளது. வெளியான சில மணி நேரத்திலேயே பல லட்சம் வியூஸ்களை பெற்றுள்ளது இந்த வீடியோ. அதில் அஜித், அர்ஜுன், திரிஷா, ஆரவ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் தெரியவந்துள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அதிரடித் திரைப்படத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post