நடிகர் அஜித்தின் உலக சுற்றுப்பயணம் குறித்து வெளியான புது தகவல்
நடிகர் அஜித் அடுத்ததாக, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' என்ற படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நேரத்தில், அவரின் நீண்ட நாள் கனவான பைக்கில் உலகம் முழுவதும் பிரயாணம் செய்வதன் அடுத்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. சென்ற மாதம், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிவித்ததற்கு ஏற்ப, அடுத்த படம் முடித்தவுடன் அஜித்குமார் உலக பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். தற்போது இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் சுற்று பயணத்தை முடிந்ததாகவும், அடுத்த கட்ட சுற்று பயணம், வரும் நவம்பர் மாதம் துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வரைபடம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் சுரேஷ் சந்திரா. அந்த சுற்றுப்பயணத்திற்கு #rideformutualrespect (பரஸ்பர மரியாதை பயணம்) என பெயரிடப்பட்டுள்ளது.