Page Loader
நடிகர் அஜித்தின் அடுத்தகட்ட திட்டம் பற்றி கூறிய அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா
நடிகர் அஜித்தின் அடுத்த திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

நடிகர் அஜித்தின் அடுத்தகட்ட திட்டம் பற்றி கூறிய அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா

எழுதியவர் Venkatalakshmi V
Mar 06, 2023
06:32 pm

செய்தி முன்னோட்டம்

'துணிவு' படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், அஜித்தின் அடுத்த நகர்வு பற்றிய தகவல் ஒன்றை ட்வீட் செய்துள்ளார், அவரின் மேனேஜரான சுரேஷ் சந்திரா. "லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது", என அவர் கூறியுள்ளார். நடிகர் அஜித் ஏற்கனவே துணிவு படத்தின் இடைவெளியிலும், அதற்கு முந்தைய வலிமை படத்தின் இடைவேளையின் போதும், மோட்டார் பைக்கில் உலக சுற்றுலா சென்றார். தொடர்ந்து அவர் மீதமுள்ள நாடுகளை, 2ஆவது சுற்று பயணத்தின் போது செல்வார் எனவும் கூறப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

அஜித்தின் அடுத்த திட்டம்

ட்விட்டர் அஞ்சல்

அஜித்தின் அடுத்த திட்டம்