NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சங்கியாக இருந்திருந்தால் ரஜினிகாந்த் 'லால் சலாமில்' நடித்திருக்க மாட்டார்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சங்கியாக இருந்திருந்தால் ரஜினிகாந்த் 'லால் சலாமில்' நடித்திருக்க மாட்டார்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 

    சங்கியாக இருந்திருந்தால் ரஜினிகாந்த் 'லால் சலாமில்' நடித்திருக்க மாட்டார்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 27, 2024
    10:22 am

    செய்தி முன்னோட்டம்

    இயக்குநர் ஐஸ்வர்யா, 'லால் சலாம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், தனது தந்தை 'ரஜினிகாந்த் சங்கி அல்ல' என்று கூறினார்.

    ஜனவரி 26-ம் தேதி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா, சமூக வலைதளங்களில் தனது தந்தை 'சங்கி' என்று முத்திரை குத்தப்படுவது குறித்து உரையாடினார்.

    மேடையில் அவரைப் பற்றியும் படத்தைப் பற்றியும் ஐஸ்வர்யா பேசியபோது ரஜினிகாந்துக்கு கண்கள் கலங்கியது.

    'லால் சலாம்' என்பது ஒரு விளையாட்டு திரைப்படமாகும். அது பிப்ரவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    'லால் சலாம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ஜனவரி 26 அன்று நடந்தது.

    அப்போது உரையாற்றிய ஐஸ்வர்யா தனது குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

    டக்ஜ்வ்க்ன் 

    ரஜினிகாந்தின் கண்கள் கலங்கிய தருணம் 

    நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சமூக வலைதளங்களில் தனது தந்தைக்கு நேர்ந்த தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.

    "பொதுவாக நான் சமூக வலைதளங்களில் இருந்து விலகியே இருப்பேன். ஆனால் எனது குழுவினர் அடிக்கடி என்ன நடக்கிறது என்று என்னிடம் கூறுவார்கள். சில பதிவுகளை என்னிடம் காட்டுவார்கள். சில பதிவுகளை பார்த்தாலே எனக்கு கோபம் வரும். நாங்களும் மனிதர்கள் தான். சமீப காலமாக என் அப்பாவை பலர் சங்கி என்று அழைக்கிறார்கள். நான் இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன், ரஜினிகாந்த் ஒரு சங்கி அல்ல. அப்படி இருந்திருந்தால் அவர் 'லால் சலாம்' போன்ற படத்தை எடுத்திருக்க மாட்டார்." என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறினார்.

    இதைக் கேட்ட ரஜினிகாந்தின் கண்கள் கலங்கியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ரஜினிகாந்த்

    குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ரஜினிகாந்த்- புகைப்படங்கள் வைரல் தனுஷ்
    தலைவர் 171 திரைப்படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்? லியோ
    "ஜிகர்தண்டா XX ஒரு குறிஞ்சி மலர்": சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு கார்த்திக் சுப்புராஜ்
    இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டியை பார்க்க மனைவியுடன் மும்பை சென்ற ரஜினிகாந்த் மும்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025