
ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராதயாவின் பள்ளி கட்டணம் எவ்வளவு தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராதயாவின் பள்ளிக்கட்டணம் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகையான ஐஸ்வர்யா ராய் கடந்த 2007 ஆம் ஆண்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.
இத்தம்பதிக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு ஆராதயா என்ற மகள் பிறந்தார்.
தற்போது ஆராதயா கல்வி கட்டணம் குறித்து தகவல்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.
மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வரும் ஆராதயாவுக்கு, பள்ளி கட்டணமாக ₹1.70 லட்சத்தை அவர்களது பெற்றோர் செலுத்துகின்றனர்.
2nd card
திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற பள்ளிகளுள் ஒன்றான இப்பள்ளி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி மனைவியால் கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இப்பள்ளியில் மாணவர்களின் படிப்பு மட்டுமல்லாமல், பிற திறமைகளும் ஊக்குவிக்க வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
சினிமா நட்சத்திரங்களின் பிள்ளைகள், அரசியல்தலைவர்களின் பிள்ளைகள், விளையாட்டு வீரர்களின் குழந்தைகள் உள்ளிட்டோர் படிக்கும் பள்ளியில் எல்கேஜி முதல் 7 ஆம் வகுப்பு வரை ₹1.70 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ₹4.48 லட்சம் கட்டணமாகவும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு கிட்டத்தட்ட ₹10 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.