
இந்தியன் 2 தந்த அடி: இந்தியன் 3 நேரடியாக OTT யில் வெளியிட திட்டமா?
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த திரைப்படம் இந்தியன் 2.
ஆனால், படத்தினை பார்த்த பின்னர், ரசிகர்கள் பலதரப்பட்ட எதிர்மறை விமர்சனங்களை வைத்தனர்.
அதனால் படமும் வசூலை குவிக்கவில்லை. இந்தியன் 2 படத்திலேயே அதன் அடுத்த பாகத்திற்கான டீசரையும் படக்குழுவினர் இணைத்திருந்தனர்.
ஒப்பீட்டளவில் 2ஆம் பாகத்தை விட, 3 ஆம் பாகம் சற்று சுவாரசியமாக இருக்கக்கூடும் என ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்தியன் 3 படத்தின் ஷூட்டிங்கும் நிறைவுற்றதாகவும், அடுத்தாண்டு இப்படம் வெளியாகும் எனவும், அதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெறுவதாக கூறப்பட்டது.
OTT வெளியீடு
ஓடிடியில் நேரடியாக வெளியிட திட்டம்
இந்தியன் 2 தந்த நஷ்டத்தில், தற்போது இந்தியன் 3 படத்தினை வாங்க தியேட்டர் உரிமையாளர்கள் முன்வரமாட்டார்கள் எனவும், அதனால் இப்படத்தினை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்தியன் 3 படத்தில் வீரசேகரனாக கமல்ஹாசனும், தக்ஷயினி என்ற விடுதலை போராட்ட பெண்மணியாக காஜல் அகர்வாலும் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கும் இசையமைத்திருப்பது அனிருத்
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Huge buzz, #Indian3 likely to have a direct OTT release sometime January 2025. Nothing official so far! pic.twitter.com/wpnXyqa80w
— Sreedhar Pillai (@sri50) October 3, 2024