27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் படத்தில் இணைந்த பிரபலம்; வேட்டையனின் வேற லெவல் அப்டேட்
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் முதன்மை வேடத்தில் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் 'மனசிலாயோ' என்ற முதல் பாடல் செப்டம்பர் 9 அன்று வெளியாகும் என சனிக்கிழமை (செப்டம்பர்7) அறிவித்த படக்குழு, பாடலின் சில வரிகளை பாடகர் பாடுவதுபோல் வெளியிட்டு, அதை பாடியது யார் என கண்டுபிடிக்குமாறு கேட்டிருந்தது. இந்நிலையில், மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ மூலம் அதில் பயன்படுத்தப்பட்டுள்ளதை புதிய புரோமோவாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி படத்தில் மலேசியா வாசுதேவன் குரல் இடம்பெறுகிறது.