
காதலர் என கிசுகிசுக்கப்படும் சித்தார்த்துடன் நடனமாடிய அதிதி ராவ்
செய்தி முன்னோட்டம்
நடிகர் சித்தார்த்துடன் காதல் என கிசுகிசுக்கப்படும் வேளையில், அதிதி ராவ் ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'மாலை டம் டம்' என்ற பாடலுக்கு இருவரும் நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் இருவரும், மும்பையில் உள்ள ஒரு விடுதியில் ஒன்றாக உணவருந்த சென்ற வீடியோ பரவலாக விமர்சிக்கப்பட்டது.
இவ்விருவரும், தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக ஏதும் பேசாத நிலையில், பொது நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக வந்ததும், அதிதியின் பிறந்த நாளுக்கு, சித்தார்த் பதிவிட்டிருந்த பிறந்தநாள் வாழ்த்து பதிவும், கிசுகிசுக்களுக்கு வலு சேர்ப்பது போலவே இருந்தது.
சித்தார்த்தும், அதிதி ராவ்வும், 2021-இல் வெளியான 'மஹா சமுத்திரம்' படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
அந்த படப்பிடிப்பு தளத்தில்தான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது எனவும் கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
சித்தார்த்துடன் நடனமாடிய அதிதி ராவ்
Love birds 😍😍 the cute pair @aditiraohydari and #Siddharth seems to be enjoying the beat, while doing the trending #TumTum reel pic.twitter.com/4Jtelt2vk6
— sridevi sreedhar (@sridevisreedhar) February 28, 2023