
மும்பையில் நடிகர் சித்தார்த்துடன் உணவருந்திய அதிதி ராவ்; இணையத்தில் வைரலாகும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ்வும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கபட்ட நிலையில், தற்போது, அவர்கள் இருவரும், மும்பையில் ஒரு ஹோட்டலில், ஒன்றாக உணவருந்த சென்ற வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
சித்தார்த்தும், அதிதி ராவ்வும், 2021ஆம் ஆண்டு வெளியான 'மஹா சமுத்திரம்' படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
அந்த படப்பிடிப்பு தளத்தில்தான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது எனவும் கூறப்படுகிறது.
சமீபத்தில், தனது பிறந்தநாளை கொண்டாடிய அதிதிக்கு, சித்தார்த் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டு இருந்தார். அந்த பதிவு, வதந்திகளுக்கு, மேலும் தீயிட்டது போல இருந்தது.
ஆனால், இந்த காதல் விவகாரம் குறித்து இருவரும் எந்த கருத்தையும் வெளிப்படையாக கூறவில்லை.
இவர்கள் இருவருமே, தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், காதல் தோல்வியையும், திருமண முறிவையும் சந்தித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
நடிகர் சித்தார்த்துடன் உணவருந்திய அதிதி ராவ்
#aditiraohydari with #siddharth and #vaibhavrekhi clicked after breakfast in juhu#btowntownlife #bollywood #bollywoodupdates pic.twitter.com/YWSqXV7zaO
— B-Town Life (@BTownLife1) January 7, 2023