அடுத்த செய்திக் கட்டுரை
    
    
                                                                                பிரபல ஹிந்தி பட நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி
                எழுதியவர்
                Venkatalakshmi V
            
            
                            
                                    Mar 02, 2023 
                    
                     05:53 pm
                            
                    செய்தி முன்னோட்டம்
பிரபல பாலிவுட் நடிகையும், ரட்சகன் பட நாயகியுமான சுஷ்மிதா சென், இன்று ஒரு இன்ஸ்டா பதிவை இட்டிருந்தார். அதில், தனக்கு இரு தினங்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதற்காக ஆஞ்சியோ செய்ததாகவும், தற்போது ஸ்டென்ட் வைத்துள்ளதாகவும் பதிவிட்டிருந்தார். அவர் பதிவை பார்த்து அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அவரின் பதிவின்படி, " உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாகவும், தைரியமாகவும் வைத்திருங்கள், உங்களுக்கு தேவைப்படும்போது அது உங்களுடன் நிற்கும், என்பது என் தந்தையின் புத்திசாலித்தனமான வார்த்தைகள். இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது, ஸ்டென்ட் வைக்கப்பட்டது. சரியான நேரத்தில் உதவி செய்தவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதற்காக தனியாக ஒரு பதிவை நான் இடுவேன்" என நீண்ட பதிவு ஒன்றை இட்டிருக்கிறார்.