Loading...
ரஜினியின் தர்மன் படத்தில் இணைந்த நடிகை ஸ்ரீலீலா: படக்குழு வெளியிட்ட வீடியோ
ரஜினிகாந்தின் தர்மன் திரைப்படத்தில் இணைந்துள்ளளார் நடிகை ஸ்ரீலீலா.

ரஜினியின் தர்மன் படத்தில் இணைந்த நடிகை ஸ்ரீலீலா: படக்குழு வெளியிட்ட வீடியோ

எழுதியவர் Vasuki
Nov 04, 2026
05:39 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 173-வது திரைப்படமான 'தர்மன்' படத்தில் பிரபல நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான பிரத்யேக அறிமுக வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் வேடத்தில் நடித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு மற்றும் வில்லனாக ராம் பொதினேனி ஆகியோர் நடிக்கின்றனர்.

நட்சத்திர பட்டாளம்

நயன்தாராவை தொடர்ந்து ஸ்ரீலீலா

சமீபத்தில் இப்படத்தில் நடிகை நயன்தாரா இணைந்ததை படக்குழுவினர் வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்தியிருந்த நிலையில், தற்போது மற்றொரு முன்னணி நடிகையான ஸ்ரீலீலாவும் இணைந்துள்ளார்.

படத்தில் இவரது கதாபாத்திரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனத் தெரிகிறது.

ரஜினிகாந்த், நயன்தாரா, ஸ்ரீலீலா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் அணிவகுத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

படப்பிடிப்பு விவரம்

பொங்கல் வெளியீடு

இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததாக புகைப்படங்களைப் பகிர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அறிவித்திருந்தார்.

தற்போது மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தகட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

விறுவிறுப்பான பணிகளுக்கு மத்தியில், இப்படத்தை 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT