
நிலா முதல் நந்தினி வரை: வைரலாகும் சாரா அர்ஜுனின் புகைப்படம்
செய்தி முன்னோட்டம்
ஒரு வயது குழந்தையாக இருந்த போதே, பல விளம்பர படங்களில் நடித்துள்ளார் நடிகை சாரா அர்ஜுன்.
அதன்பின்னர் AL .விஜய் இயக்கத்தில் வெளியான 'தெய்வ திருமகள்' திரைப்படத்தில், மனநலம் குன்றிய விக்ரமின் மகளாக, நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
திறமையான மொழி உச்சரிப்பு, தேர்ந்த நடிப்பு என முதல் படத்திலேயே பாராட்டுகளை பெற்றார். தொடர்ந்து 'சைவம்' என்ற படத்திலும் நடித்தார்.
பேபி சாராவாக தமிழ் மக்களுக்கு பரிச்சயம் ஆனவர், இன்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், பதின்வயது நந்தினி கதாபாத்திரத்தில், நுட்பமான முகபாவனைகள் மூலம், அனைவரையும் கவர்ந்துள்ளார். தற்போது சாரா, இந்த இரண்டு படத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்து ஒரு ட்வீட் செய்துள்ளார்.
அதை விக்ரமும் பகிர்ந்து, "உன்னை நினைத்து பெருமை படுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
Embed
Twitter Post
Rock on lil Brat!! So proud of you. https://t.co/ZJ95EiyRdC— Vikram (@chiyaan) May 2, 2023 Rock on lil Brat!! So proud of you. https://t.co/ZJ95EiyRdC— Vikram (@chiyaan) May 2, 2023